கார்த்திகா ஆன்மீக சேவைப் பிரிவு
இறைவனை அனைவரும் உணர வேண்டும் என்பதையும், இறைவனின் திருவருளை எல்லோரும் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மானிட சேவை புரியும் நோக்கத்துடன் கார்த்திகா ஆன்மீக சேவைப் பிரிவு இயங்கி வருகிறது. வழிபாட்டு முறைகளால் இறைவனை மகிழ்விப்பதன் மூலம் எல்லையில்லா அந்தப் பரம்பொருளிடமிருந்து பெறும் நன்மைகள் ஏராளம். இயற்கையாம் அந்த இறையருள் இப்பூவுலகில் பல அற்புத உருவங்களிலும் பல பொருட்களிடமிருந்தும் கிடைக்கிறது என்பதை சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சூட்சுமமாகத் தெரிவித்துள்ளார்கள்.
இயற்கையாகக் கிடைக்கும் அற்புத சக்தி வாய்ந்த அருட்பிரசாதங்களை ஆன்மீக அன்பர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப தயார் செய்து பூஜைகளுக்குட்படுத்தி உருவேற்றி அந்த அருட்பிரசாதங்களை வேண்டுவோருக்கு இந்த பிரிவு வழங்கி வருகிறது.
செல்வ ரஸமணி, நவசக்தி மூலிகை ரஸமணி, பலவகை ருத்ராட்சம், ஸ்வர்ண ஸ்படிக மாலை, காந்த முத்து மாலை, நவரத்ன மாலை, ராஜ வஸீய மூலிகை குங்குமம் ஆகியவற்றில் இறை சக்தியும், காந்த சக்தியும் மிகுதியாக உள்ளன.
இதேபோன்று சக்கர வழிபாடும் சித்தர்களாலும், ரிஷிகளாலும் கண்டுணரப்பட்டு பின் மானிடர்களுக்கு அருளப்பட்டது. ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு சக்தியை கொண்டது. இறைவனின் பிரதிநிதிகளாகிய இந்த சக்கரங்களை முறையாகப் பூஜித்து வழிபாடு செய்தால் இறைவனையே நேரில் கண்டு தரிசிப்பதற்கு இணையாகும். பீஜாட்சரங்களால் உருவாக்கி உருவேற்றப்பட்ட இந்த சக்கரங்களில் அதற்குரிய தெய்வம் வாசம் செய்து வருவதாக இந்து வேத சாஸ்திரம் உபதேசிக்கிறது. இந்த சக்கரங்களை முறையான பூஜைகளுக்கும் ஹோமங்களுக்கும் உட்படுத்தி உரியவர்களுக்கு கார்த்திகா ஆன்மீக சேவை பிரிவு வழங்கி வருகிறது.
கீழ்காணும் அருட் செல்வங்களை எமது நிலையத்திற்கு அருகில் உள்ளவர்கள் நேரில் வந்து குருஜி அவர்களின் ஆசியுடன் பெற்றுச் செல்லலாம். நேரில் வர இயலாதவர்கள் உரிய தொகையை செலுத்தி முழு முகவரியைத் தெரிவித்தால் உரிய தெய்வப் பொருள் தங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். பணத்தை தாராபுரம் என்ற ஊரில் மாற்றத்தக்க வகையில் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம், தாராபுரம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட D.D. மூலமாகவோ அல்லது M.O. மூலமாகவோ அனுப்பலாம்.
– நிர்வாகி