குரு பெயர்ச்சி பூஜைகள்

நலமே விளைக.
இறைவனுள் அன்புடையீர்,
ஸ்வஸ்திஸ்ரீ பராபவ வருஷம் வைகாசி மாதம் 12 – ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 10-53 மணிக்கு வாக்கியப் பஞ்சாங்க ரீதியாக குருபகவான் கடக ராஸிக்குப் பெயர்ச்சியாவதை முன்னிட்டு 26-5-2026 அன்று தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன.
புராண சிறப்பு மிக்க தாராபுரம் மாநரில் அமைந்துள்ள கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் சார்பாக 26-5-2026 செவ்வாய்க்கிழமையன்று பகல் 10-53 மணி தொடங்கி சங்கல்பம், கலச ஆவாஹனம், ஜபம் ஆகிய புனஸ்காரங்களுடன் சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன.
இந்த பூஜைகளில் மூல மந்திரங்களாலும், ஜபங்களினாலும் உருவேற்றப்பட்ட திருஷ்டி சக்கரங்கள், வாஸ்து சக்கரங்கள், குபேர தனாஹர்ஷண சக்கரங்கள், சுதர்ஸன சக்கரங்கள், ஸ்ரீ சக்கரங்கள், மஹாலக்ஷ்மி சக்கரங்கள், விநாயகர் கவசங்கள், ஆஞ்ஜநேயர் கவசங்கள், குரு கவசங்கள், ஒருமுகம் மற்றும் இருமுகம் ருத்ராட்சங்கள், ரஸமணிகள், ராஸிக் கற்கள், ராஜ வஸிய மூலிகைக் குங்குமம், ஸ்வர்ண ஸ்படிக மாலைகள், முத்து மாலைகள், நவரத்ன மாலைகள் ஆகியவை படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த அருட் செல்வங்கள் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும். கல்வி சிறப்படையும். பிணி தீரும். ஆயுள் விருத்தியாகும். திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விரும்பியவாறு புத்ர பாக்யம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் பெருகி தனம் சேரும். விவசாயம் மேன்மை அடையும். உத்யோகத்தில் பாதுகாப்புக் கிடைக்கும். எதிரிகள் தொல்லை விலகும். கிரஹ தோஷங்கள் நீங்கும். மேலும் பல இஷ்டார்த்த சித்திகளும் ஏற்படும்.
இந்த குரு பெயர்ச்சி பூஜைகள் தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் நடைபெற இருப்பதால், ஆன்மிக பெருமக்கள் அவரவர் இருப்பிடத்திலேயே குரு பகவானை தியானித்து குருவருளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நடக்க இருக்கும் இந்த குரு பெயர்ச்சி பூஜைகளில் அர்ச்சனைகள் செய்து கொள்வதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அர்ச்சனை குறித்தும், சக்தி வாய்ந்த அருட் பிரசாதங்களின் தேவை குறித்தும் எமது நிர்வாக அலுவலகத்தை உடனே தொடர்பு கொண்டு தங்கள் தேவையை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இறைசக்தி வாய்ந்த இந்த பூஜைகளிலும், அர்ச்சனைகளிலும் ஆன்மிக அன்பர்கள் பங்கேற்று குரு பகவானின் அருளாசியையும், சகல தேவதைகளின் அருட் பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளுமாறு இறைவனின் திருவருளால் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பூஜைகள் நடைபெறும் இடம் : கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம், தாராபுரம்.

நிர்வாகி
(கார்த்திகா பூஜா அமைப்புக் குழு),
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in

Scroll to Top