ஜோதிட ஆலோசனைப் பிரிவு

ஜோதிட பலன்களும், ஆலோசனையும் பெற விரும்பும் அன்பர்கள், பின்வரும் படிவத்தை விடுபடாமல் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தல் வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டிய ஜோதிட பலன்களின் விபரங்களை தெளிவாக தெரிவித்தல் வேண்டும். குறிப்பிட்டாற் போல் உள்ள மூன்று கேள்விகளுக்கு மட்டும் குருஜி அவர்கள் பதிலளிப்பார்கள். பொதுப்படையான கேள்விகளைக் கேட்டால் பதிலளிப்பதில் தெளிவும் முழுமையும் இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே பொதுப்படையாக உள்ள கேள்விகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதுமட்டுமன்றி இறைவனிடம் தாங்கள் வேண்டும் மூன்று கோரிக்கைகளையும் எழுதி அனுப்பலாம். தங்களது கோரிக்கைகள் கார்த்திகா ஜோதிட குரு பீடத்தில் நடைபெறும் நித்ய பூஜையில் வேண்டுதலாக வைக்கப்பட்டு ஜோதிட பலன்களுடன் பிரசாதமும் அனுப்பி வைக்கப்படும்.

முன் ஜென்ம தீய வினைகளால் ஏற்படும் பாதிப்பு, செல்வாக்கு குறைவுபடுதல், ஆன்ம சக்தியில் பின்னடைவு, வாக்கு பலிதமாகாமல் போதல், கல்வியில் தடங்கல், பொருளாதார பற்றாக்குறை, தீராத பிணிகள், திருமணத் தடை, மண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மை, கணவன் மனைவி பிரிந்து வாழுதல், பூர்வீக சொத்தில் இடர்பாடு, கடன் தொல்லை, அடிக்கடி விபத்துகள் ஏற்படுதல், நாற்கால் பிராணிகளால் நஷ்டம், பயணத்தில் பாதுகாப்பின்மை, புத்ர தோஷம், நினைவாற்றல் குறைவு, அரசாங்கத் தொல்லை, நீதிமன்ற வழக்குகளில் பின்னடைவு, சிறை பயம், நெருப்பு மற்றும் நீரினால் கண்டம், குறைந்த மாங்கல்ய பலம், தொழில் கூட்டாளிகளால் தொல்லை, ஜாதக ரீதியாக ஆயுள் குறைவு, தொழிலில் நஷ்டம், பதவியில் உரிமை பறிபோதல், வேலைவாய்ப்பில் தடங்கல், அரசியலில் தோல்வி, விவசாயத்தில் நஷ்டம், வீடு மனை அமைத்தலில் தடங்கல், திரைப்படம், சங்கீதம், இசை போன்ற துறைகளில் வெற்றி வாய்ப்பை இழத்தல், மன நோய், பெரியோர் சாபம், செய்வினை, பில்லி, சூன்ய, ஏவலால் துன்பம் மற்றும் இதுபோன்ற பல விஷயங்களில் தீர்வு காண கார்த்திகா ஜோதிட ஆலோசனைப் பிரிவு பேருதவியாக செயல்படுகிறது.
இதோடன்றி தீய பலன்களுக்கு பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகளால் செய்யப்படும் சிறப்பான பரிகாரங்களும் தெரிவிக்கப்படும்.
ஜோதிட பலன்கள் கோரும் விண்ணப்பப் படிவத்தை download செய்ய இங்கு Click செய்யவும்

Scroll to Top