கார்த்திகா ஜோதிட சேவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் குருஜி அவர்கள் ஜோதிடத் துறையில் 35 ஆண்டு கால ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதன் பலனாகக் கண்டுபிடித்த உண்மைகள் பல. அவர்களின் படைப்புகள் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தால் நடத்தப்படும் அஞ்சல்வழி ஜோதிடக் கல்வியின் பாடப் புத்தகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஜோதிடக் கலை மூலம் பலன்கள் கூறுதல் என்ற பொருள் குறித்து ஏராளமான சொற்பொழிவுகளும், பயிற்சி வகுப்புகளும் குருஜி அவர்கள் நடத்தி உள்ளார்கள். சூரிய சித்தாந்த ஜோதிடக் கொள்கையின்படி குருஜி அவர்கள் கூறும் ஜோதிட பலன்கள் அற்புதமான முறையில் மிகத் துல்லியமாக உள்ளன. ஜோதிட பலன்கள் தெளிவாக இருப்பதால் குருஜி அவர்களின் ஜோதிட ஆலோசனை மற்றும் அறிவுரைகளைப் பெற ஆன்மீக அன்பர்களும், ஜோதிட அபிமானிகளும் ஏராளமாக நேரில் வந்து ஜோதிட பலன்களைத் தெரிந்து கொண்டு ஆசி பெற்றுச் செல்கிறார்கள். குருஜி அவர்களின் ஜோதிட அறிவுரை மூலம் தெளிவு பெற்றுச் சென்றுள்ளவர்கள் பெற்ற பலன்கள் ஏராளம். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் பொழுதும் குருஜி அவர்களின் அருள்மொழிக்காக நேரில் வந்து ஆசி பெற்று செல்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
– நிர்வாகி


இந்த மாத பலன் (14-3-2016 முதல் 13-4-2016 வரை)


மேஷம் :


கலை மற்றும் பத்திரிக்கைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல பாராட்டுதல்கள் கிடைக்கும். ஆன்மீகவாதிகளின் ஆதரவால் வெற்றி பல காண்பீர்கள். மாத முற்பகுதியில் அலைச்சல், தேவையற்ற பொருட் செலவு, உறவினர்களால் திருப்தியற்ற நிலை என சற்று சுமாராகவே இருக்கும். வீடு, நிலபுலன்கள் வாங்குதல் போன்ற முயற்சி திருப்திகரமாக இருக்கும். உறவினர் அல்லாதோர் உதவி செய்வர். பழைய சொத்துக்களை மேம்படுத்துதல் போன்ற முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் கல்வியில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நீதித் துறையில் உள்ளவர்கள் மனநிறைவாகப் பணியாற்றுவார்கள். மாத பிற்பகுதியில் உறவினர்களால் தொல்லையும், மனதிற்கு நெருடலான ஒரு செய்தியால் அமைதியற்ற நிலையும் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிறைவாக இருக்கும். பொதுவான இது ஒரு நல்ல மாதம்.


ரிஷபம் :


வட்டித் தொழிலில் தேக்கங்கள் காணும். பழைய வாகனங்களை விற்றல், புதிய வாகனங்களை வாங்குதல் போன்ற முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஜவுளித் துறையில் உள்ளவர்கள் போட்டிகள் பலவற்றை சந்திப்பார்கள். கணிணி மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ளவர்களுக்குப் பாராட்டுக்கள் கிடைக்கும். நிலத் தரகர்கள் எதிர்ப்புகளை சந்திப்பார்கள். கணவன் மனைவி உறவு அன்பு கலந்ததாக இருக்கும். இரும்பு, பருத்தி, விவசாய பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் உள்ளவர்கள் சிரமத்துடன் தொழிலை நடத்துவார்கள். சிறு பயணம் லாபம் தரும். வெளிநாட்டு ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்களுக்கு சிறிய லாபமே கிடைக்கும். கால்நடைகளால் சுமாரான வருமானமே உண்டாகும். அரசியல்வாதிகள் கடுமையான போட்டிகளை சந்திக்க வேண்டிவரும். பொதுவாக சுமாரான மாதம் இது.


மிதுனம் :


அரசாங்க அதிகாரிகள் திறமையாகக் கடமையாற்றியதற்கு பாராட்டுதல் பெறுவர். வயிறு தொடர்பான சிறு பிணி ஏற்படும். குடும்ப நண்பர் ஆதரவால் தற்பொழுது நடத்தும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் காணும். திடீர் பயணம் ஒன்று ஏற்பாடாகும். கணவன் மனைவி உறவு அன்பு கலந்ததாக இருக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மிகுந்த பணிச் சுமையை சந்தித்து, பாராட்டுதல் பெறுவர். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வியாபாரிகள் இம்மாத பிற்பகுதியில் புதிதாக தொழில் ஒன்றை தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குழந்தைகள் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டிய கட்டாயம் ஒன்று நிகழும். நிலம் வாங்குதல், வீடு மாற்றுதல் போன்ற முயற்சியில் சற்று பின்னடைவு ஏற்படும். பொதுவாக இது ஒரு நல்ல மாதம்.


கடகம் :


விவசாயிகளுக்கு சோதனையான மாதம் இது. அரசாங்கப் பணியில் உள்ளவர்கள் மேலதிகாரிகளால் நிர்பந்திக்கப்படுவார்கள். பத்திரிக்கையாளர்கள் மிகுந்த அலைச்சலையும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி வரும். புதிய நகைகள் வாங்குதல், வீட்டை அலங்கரித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். குழந்தைகளின் உடல் நலம் குறித்து அக்கறை காட்ட வேண்டி வரும். கணவன் மனைவி உறவு அன்பு கலந்ததாக இருக்கும். பெற்றோர்களின் அறிவுரை ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் இராது. திட்டமிட்ட பயணம் எதிர்பாராதவாறு தடங்கலாகும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாட்டிற்காக பயணம் மேற்கொள்வீர்கள். கால்நடைகள் நல்ல லாபம் தரும். நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து திருப்தியற்ற நிலையிலேயே இருக்கும். பொதுவாக ஏற்ற இறக்கங்கள் உள்ள மாதம் இது.


சிம்மம் :


பொழுதுபோக்கிற்காக உறவினர்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படும். வாகனங்களில் பழுதுகள் ஏற்பட்டு செலவினை சந்திப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். திரைப்படம், இசை போன்ற கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்சனை ஒன்றை சந்தித்து வெற்றி காண்பீர்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு சோதனையான மாதம் இது. சிறுநீரகம் மற்றும் நரம்பு தொடர்பான உடல் பிணிக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும். சேமிப்புகள் பல நடந்தாலும், செலவுகளே அதிகமாக இருக்கும். உடன்பிறப்புகள் ஆதரவு காட்டுவார்கள். கணவன் மனைவி உறவு அன்பு கலந்ததாக இருக்கும். பொதுத் துறையில் உள்ளவர்களுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். பொதுவாக இது ஒரு சுமாரான மாதம்.


கன்னி :

பெற்றோரின் ஆதரவால் பிரச்சனை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவு ஒன்றின் பிரிவால் குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படும். இம்மாத மத்தியில் பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சிரமங்கள் பல ஏற்படும். வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் என இம்மாதத்தில் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். கண்ணில் நோய் ஏற்படும். அலுவலகத்தில் காணாமல் போன ஒரு பொருள் கிடைத்து விடும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்திற்காக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும். விவசாய உற்பத்திப் பொருளில் உள்ளவர்கள் பலத்த போட்டிகளை சந்திப்பார்கள். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படும். பதவி உயர்வு தொடர்பான தகவல் ஒன்றினால் மகிழ்ச்சியடைவீர்கள். ஆன்மீக சுற்றுப் பயணம் மகிழ்ச்சியைத் தரும். பொதுவாக இது ஒரு நல்ல மாதம்.


துலாம் :


மேற்படிப்பு தொடர்பாக அவசரப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர் ஒருவரின் நட்பால் தீராத பிரச்சனை ஒன்றுக்கு நல்ல முடிவு கிடைக்கும். தாய்வழி சொத்து ஒன்று லாபகரமான விலைக்கு விற்பனையாகும். சினிமா, நாடகம், இசை, சிற்பம், ஓவியம் போன்ற கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வருமானமும், பாராட்டுதலும் கிடைக்கும். நீதித் துறையில் உள்ளோர், ஆசிரியர்கள், அரசியல் சொற்பொழிவாளர்கள் ஆகியோர் இம்மாத இறுதியில் கௌரவிக்கப்படுவார்கள். வியாபாரக் கூட்டாளிகளில் ஒருவர் பிரிவினை எண்ணத்தை ஊட்டுவார். கணவன் மனைவி உறவில் சிறு மன வேறுபாடு ஏற்படும். கட்டடத் தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். தொழிலில் இடமாற்றம், வீடு மாற்றுதல் போன்ற சிந்தனை ஏற்படும். பொதுவாக இது ஒரு நல்ல மாதம்.


விருச்சிகம் :


ராணுவம், காவல் துறை போன்ற துறையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுப்பர். அஜீரணக் கோளாறு, தூக்கமின்மை போன்ற சிறு உடல் தொந்தரவுகள் ஏற்படும். இக்கட்டான சூழ்நிலையில் உண்டாகும் கொடுக்கல் வாங்கலில் நண்பர் ஒருவரால் உரிய நேர உதவி கிடைக்கும். கணவன் மனைவி உறவு அன்பு கலந்ததாக இருக்கும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல பாராட்டுதல் கிடைக்கும். ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சியடைவீர்கள். பெண்களுக்கு முன்னேற்றமான மாதம். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய வீடு கட்டும் சிந்தனை ஏற்படும். ஆன்மீகவாதிகள் கௌரவிக்கப்படுவார்கள். இரும்பு, சிமெண்ட் போன்ற வியாபாரத்தில் உள்ளவர்கள் பலத்த போட்டிகளை சந்திப்பார்கள். பொதுவாக ஏற்ற இறக்கங்கள் உள்ள மாதம் இது.


தனுசு :


நகை வியாபாரம், ஆயத்த ஆடைகள் வியாபாரம் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். கால்நடைகள் பராமரிப்பில் உள்ளவர்கள் மிகுந்த லாபத்தைக் காண்பார்கள். கல்வித் துறையில் உள்ளோர் பாராட்டுதல் பல பெறுவர். காலில் சிறு நோய் உண்டாகும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு பின்னடைவான மாதம் இது. தூரத்து உறவினர் ஒருவரின் தலையீட்டால் குடும்பத்தில் சிறு குழப்பம் உண்டாகும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் காண்பீர்கள். வங்கிக் கடன் உடனடியாகக் கிடைக்கும். கலைத் துறையில் உள்ளவர்கள் பாராட்டுதல்கள் பெற்று மகிழ்ச்சி அடைவர். சணல், பருத்தி போன்ற வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சற்று பின்னடைவு ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளுக்கு வியாபாரக் கூட்டாளிகள் ஆதரவளிப்பார்கள். பொதுவாக ஏற்ற இறக்கங்கள் உள்ள மாதம் இது.

மகரம் :

கோவில் நிர்வாகம், ஆன்மீகம் தொடர்பான சேவையில் உள்ளோர் அதிகப் பணிச் சுமையால் சிரமப்படுவார்கள். பெற்றோர் ஆதரவு கிடைக்கும். நீண்ட பயணம் திருப்திகரமாக இராது. விவசாயிகள் பல எதிர்பார்ப்புகளை சந்திப்பார்கள். நீதித் துறை, காவல் துறை போன்ற அரசுத் துறையிலுள்ளவர்கள் கடுமையான உழைப்பை மேற்கொள்ள வேண்டி வரும். கணவன் மனைவி உறவு அன்பு கலந்ததாக இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிரிகளை வெல்லக் கூடிய மனத் துணிச்சலை இம்மாதத்தில் காண்பீர்கள். நிலபுலன்கள் மீதான சிந்தனையால் கவலைகள் அதிகமாகும். உடன்பிறப்புகள் உற்ற நேரத்தில் உதவுவார்கள். வாகனங்களின் மீதான செலவு அதிகமாகும். எதிர்பாராத பொருள் விரயம் ஒன்று இம்மாத இறுதியில் ஏற்படும். பொதுவாக இது ஒரு சுமாரான மாதம்.


கும்பம் :


தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். விளையாட்டுத் துறையில் உள்ளோர் நல்ல முன்னேற்றத்தைக் காண்பர். வெளிநாட்டுப் பயணம் ஒன்றுக்குத் திட்டமிடுவீர்கள். குழந்தைகளின் கல்விக்காக செலவுகள் ஏற்படும். பங்குச் சந்தையில் பின்னடைவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு அன்பு கலந்ததாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். மேலதிகாரிகளை சந்தித்தல், அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்தல் போன்ற ஊக்கமான காரியங்களில் இறங்கி மகிழ்ச்சியடைவீர்கள். இம்மாத மத்தியில் தேவையற்ற பயணம் ஒன்றினால் பொருட் செலவு ஏற்படும். போக்குவரத்துத் துறையில் உள்ளவர்களுக்கு அதிகப் பணிச் சுமை உண்டாகும். கலை, இலக்கியம் போன்ற துறையில் உள்ளோர் புதிய படைப்புகளால் லாபம் பெறுவர். பொதுவாக இது ஒரு நல்ல மாதம்.

மீனம் :

புதிய பதவிகளுக்காக பொருட் செலவு ஏற்படும். அதிக அலைச்சல், புதிய மனிதர்களைச் சந்தித்தல் என ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பணிபுரிவோர் சிரமங்களை திறமையாக சமாளிப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். பூமி, நிலபுலன்கள் மீது செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிகள் கிடைக்கும். அரசாங்க உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வில் தாமதங்கள் ஏற்படும். பழைய சொத்து ஒன்றை விற்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்படும். பெற்றோரின் ஆதரவு இம்மாத இறுதியில் உதவிகரமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களின் ஆதரவும் ஊக்கமுடையதாக இருக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். கோர்ட் விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் காணும். புதிய மனிதர்களின் ஆதரவால் இதுவரை தேக்கமடைந்த காரியம் ஒன்றில் வெற்றி பெறுவீர்கள

Scroll to Top