மாணவராக சேரும் விதம்

பலாநி க்ரஹசாரேண ஸுசயந்தி மநீஷிண : /
கோ வக்தா தாரதம்யஸ்ய தமேகம் வேதஸம் விநா //

“ஜோதிடர்கள் கிரஹங்களின் அசைவுகளைக் கொண்டு அதன் பலாபலன்களை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர். இதுவன்றி, பிரம்மாவைத் தவிர வேறு எவராலும் இதுதான் நடக்கும் என்று கூறிவிட முடியாது.”

வாழ்த்து :

நலமே விளைக.
இறைவனின் நல்லருள் இம்மடல் கண்டது முதல் தங்கள் இல்லத்தில் நிலவ நமது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் வாழ்த்து வழங்குகிறது.

ஜோதிடக் கலை :

வேதத்தின் ஆறு பாகங்களில் ஒன்றான ஜோதிடம் இயற்கையின் ரகஸியங்களை சரியாக முன்னுணர்ந்து சொல்லும் கலையாகத் திகழ்கிறது. நமது இந்திய நாட்டில் ஜோதிடம் மூன்று பிரிவுகளாக உள்ளன. பராசரர் முறை, ஜைமினி முறை, தாஜக முறை என்று இவை அழைக்கப்படுகின்றன. ஜைமினி முறை தற்பொழுது முழுமையாக புழக்கத்தில் இல்லை. தாஜக முறை ராஸி பலன் அறிய பயன்படுகின்ற ‘கோட்சாரம்’ என்ற முறைக்குட்பட்டது. பராசரரின் முறைதான் தற்பொழுது நமது நாட்டினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பூவுலகிற்கு நாரதர் இக்கலையை அருளிச் செய்தார் என்பது புராணம். அதன் பின்னர் வழிவழியாய் சௌனகர், வசிஷ்டர், அத்திரி, மனு, புலஸ்தியர், அங்கிரஸ், வியாசர், ரோமேசர், மரீசி, சியவனர், யவனர், காசியபர், பராசரர், வராஹமிஹிரர், ஸ்ரீபதி, ஸத்யாச்சாரி, பாஸ்கரர், ரேணுகர், வைத்யநாதர், பிரம்மகுப்தர் ஆகியோர் ஜோதிட ஆராய்ச்சியை கிரஹ நிலையைக் கொண்டு வளர்த்தனர் என்பது சரித்திரம். பாரசீகத்தில் அல்ஹாகீம், முகம்மதியர் நாட்டில் இயூகீன் ஷியூக், அப்துல்லா, ஷிஸீஹ் போன்றோர் ஜோதிடத்தில் சிறந்து விளங்கினர். ரோமாபுரியில் அப்பல்லோனியஸ் சிறந்த வானவியல் ஜோதிட நிபுணராகக் கருதப்பட்டார். தென்னிந்தியாவில் பல சித்தர்கள் வருங்காலத்தை முன்னுணர்ந்து கூறினர். அவர்களின் படைப்புகளையே இன்று நாம் பயன்படுத்தி பலன் அடைந்து வருகிறோம்.

இப்படிப்பட்ட ஜோதிடக் கலை இறைவனால் மானிடருக்கு அருளப்பட்ட ஒரு மாயக் கண்ணாடி ஆகும். ஆஸ்திக மக்களால் போற்றப்படும் இக்கலையை நாஸ்திகரும் ஏற்றுக் கொள்ளும் காலம் வந்து விட்டது. ஒருவருக்கு ஜோதிடம் தெரியும் என்று அறிந்த மாத்திரத்திலேயே அவரைச் சுற்றி மக்கள் திரள்வதை கண்கூடாகக் காண்கிறோம். எல்லோருக்கும் தமது எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் ஆசை உண்டு என்பதை இது உணர்த்துகிறதல்லவா? நல்லதாயின் மகிழ்ச்சியுடனும், கெட்டதாயின் எச்சரிக்கையுடனும் செயல்பட ஜோதிடம் ஒரு ஜோதியாகத் திகழ்கிறது. இந்த ஜோதி ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்றப்பட வேண்டியதொன்று. ஜோதிடக் கலையின் இரகஸியங்கள் பல மறைந்து கொண்டு வருகின்றன. பல நூல் ஆராய்ச்சியும், பழைய ஏடுகளைப் புதுப்பித்து ஆய்வதும் தற்பொழுது தேவையாக உள்ளது.
மேலை நாட்டினரின் சாயன முறைப்படியும் கிரஹ நிலையைக் கொண்டு நிகழ்ச்சிகளை முன் உணர்த்தி விடலாம். கிரஹங்கள் இப்பூவுலகில் எவ்வாறு ஆட்சி செலுத்துகின்றன என்பதைக் கூறும் இக்கலை மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இறைவனை நேரடியாக காண இயலாவிட்டாலும் இறைவனால் நியமிக்கப்பட்ட கிரஹங்களும், பஞ்ச பூதங்களும் இறைவனை உணர்த்தி நமது வாழ்வில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றன. தற்பொழுது ஒவ்வொரு இயலுக்கும் தனித்தனி படிப்பு, பட்டம், ஆராய்ச்சி என இருப்பது போல் ஜோதிடக் கலையையும் முறையான கல்விக்கு உட்படுத்த வேண்டும். அந்த ஒரு நிலையை உருவாக்கத்தான் நமது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் :

இது ஒரு அரசாங்கப் பதிவு பெற்ற நிறுவனம் ஆகும்.
21-6-1989 அன்று பூஜை புனஸ்காரங்களுடன் கர்ம சிரத்தையாக நமது குருநாதர் அவர்களின் நல்லாசியுடன் தொடங்கி நிறுவப்பட்ட இந்த ஜோதிடப் பயிற்சி நிலையம், ஜோதிடக் கலையின் அனைத்து விஷயங்களையும் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கி வருகிறது. ஜோதிடக் கலையின் அடிப்படை நிலையை தெரியாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொண்டு முதல் நிலை, முதுநிலை, ஆராய்ச்சி நிலை என்ற அளவுக்கு உயர்த்தப் படுவார்கள். அந்த விதத்தில் நமது பாடத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் மொழியை போதனா மொழியாகக் கொண்டு தற்பொழுது அஞ்சல்வழி மூலம் இந்த அரிய கலையை பயிற்றுவிக்கிறோம்.

இதன் நிர்வாக அலுவலகம் கீழ்க்கண்ட முகவரியில் இயங்கி வருகிறது. அனைத்துக் கடிதத் தொடர்புகளையும் இந்த முகவரியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நிர்வாகி
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

மாணவராக சேரும் விதம் :

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை ரூ. 50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த படிவத்தை முழுமையாய் பூர்த்தி செய்து இப்பயிற்சி நிலையத்திற்கு உரிய தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பதிவுக் கட்டணம் மற்றும் முதல் மாதப் பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றையும் அனுப்பி வைத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பமும் உரிய கட்டணமும் நமது பயிற்சி நிலையத்திற்கு வந்த உடன், குறிப்பிட்ட அந்த மாணவருக்கு பதிவு எண் ஒன்று அறிவிக்கப்படும். கடிதத் தொடர்பு கொள்ளும் பொழுதெல்லாம் அப்பதிவு எண்ணை தவறாமல் குறிப்பிட்டு எழுதுதல் வேண்டும்.

பயிற்சிக் கட்டணம் :
முதல் மாதப் பயிற்சிக் கட்டணத்துடன் செலுத்தும் தொகை : உள்நாடு வெளிநாடு
அ) பதிவுக் கட்டணம் ரூ. 500/- ரூ. 1000/-
ஆ) முதல் மாதப் பயிற்சிக் கட்டணம் ரூ. 200/- ரூ. 400/-
மொத்தம் ரூ. 700/- ரூ. 1400/-
இதன் பின்னர் ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் 5-ஆம் தேதிக்குள் இப்பயிற்சி நிலையத்திற்கு செலுத்த வேண்டிய தொகை
மாதாந்திரப் பயிற்சிக் கட்டணம் ரூ. 200/- ரூ. 400/-
தொழில் முறை ஜோதிடத்திற்கு உதவும் இணைப்புகளுக்காக (Astrological Kit)
கடைசி மாதக் கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டிய தொகை
ரூ. 200/- ரூ. 400/-

 

பயிற்சிக் கட்டணம் கிடைக்கப் பெற்ற உடன் பாடம் அனுப்பப்படும். பாடங்களை குறித்த காலத்திற்குள் பெற பயிற்சிக் கட்டணத்தை உரிய தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பயிற்சிக் கட்டணம் செலுத்தும் விதம் :

i). M.O. ii). D.D. (தாராபுரம் என்ற ஊரில் மாற்றத்தக்க வகையில் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் என்ற பெயருக்கு எடுக்கப்பட்டது. iii). வங்கிப் பரிவர்த்தனை எனில் INDIAN OVERDEAS BANK, KOLINJIWADI BRANCH, KARTHIKA JOTHIDA PAYIRCHI NILAYAM, C/A No. 053502000000262 IFSC : IOBA 0000535. IV). G-PAY – 94430 83109. V). நேரில் பணம் செலுத்துதல்.

பயிற்சிக் காலம்        :      13 மாதங்கள்.
பயிற்று மொழி         :       தமிழ்.
பயிற்று வழி              :      அஞ்சல்வழிக் கல்வி.
பயிற்றுவிக்கும் பாடம் :
முதல் நிலை :

லக்னம், ராஸி கணித்தல், ராஸி நவாம்ஸ சக்கரங்கள் அமைத்தல், கிரஹ ஸ்புடம், அஷ்டகவர்க்கம் மற்றும் பல ஜோதிட சக்கரங்கள் அமைத்தல், உடுமஹாதசை, சாரம், உறவு, காரகத்துவம் ஆகியவை காணல்.

மேல் நிலை :

ஜனனம் அறிதல், உடல் அமைப்பைக் கூறுதல், குடும்பம், வாக்கு, கண் பார்வை, இளைய சகோதரம், போகம், காது இவைகளைக் கூறுதல். தாய்வழி, வித்தைகள், வாகனம், வியாபாரம், புத்ரம், புகழ், சத்ருக்கள், வழக்கு, கடன், ரோகம் இவற்றை அறிதல். களத்திரம், மாரகம், கூட்டாளிகள் இவற்றின் தன்மையை எடுத்துரைத்தல். ஆயுள், தகப்பனார் வழி, பயணம், செய்தொழில், மூத்த சகோதரம், லாபம் ஆகியவற்றை ஆராய்தல். செலவு, நஷ்டம், ஸ்வர்க்கம் போன்றவற்றைக் கண்டுணர்தல்.

ஆராய்ச்சி நிலை :

அமைத்த ஜாதகத்தை ஆராய்தல், பலன்கள் சொல்வதில் பின்பற்றும் முறைகளைக் கூறுதல், திருமணப் பொருத்தம் பார்த்தல், ஆயுள் கணிதம் செய்தல். மேலும் கோட்சாரம் ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்தல். இதோடன்றி நேர்முகப் பயிற்சியிலும் ஈடுபடுத்துதல்.

மறுமொழி வினாக்கள் :

ஜோதிடப் பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பாடங்களின் கடைசிப் பகுதியில் அந்தந்த மாதங்களுக்குரிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அந்த வினாக்களுக்குரிய விடைகளை மாணவர்கள் தவறாமல் எழுதி நமது நிலையத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். விடைகளில் தவறுகள் இருப்பின் அவை சுட்டிக் காட்டப்பட்டு உரிய திருத்தங்கள் செய்து ஜோதிட மாணவர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தங்களை பயிற்சியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும், பாடங்களை அவர்கள் புரிந்து கொண்ட தன்மையை நமது நிலையம் தெரிந்து கொள்வதற்கும் இது உதவும்.

நேரடிப் பயிற்சி :

ஆறாவது மாதப் பயிற்சி முடிந்தவுடன் இரண்டு நாட்கள் நேரடிப் பயிற்சியும், 13-ஆம் மாதப் பயிற்சி முடிந்தவுடன் இரண்டு நாட்கள் நேரடிப் பயிற்சியும் நடத்தப்படும். நேரடிப் பயிற்சிக்கான தேதி மற்றும் கட்டணம் ஆகியவை உரிய காலத்தில் தெரிவிக்கப்படும்.

தேர்வு :

பயிற்சி கால முடிவில் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் என்ற அமைப்பின் மூலம் பட்டமும், சான்றிதழும் வழங்கப்படும். ஆண்டு இறுதித் தேர்வில் 50% மதிப்பெண் பெற்றவரே தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுவார். 50% முதல் 79% முடிய மதிப்பெண் பெறுபவர் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ‘ஜோதிட மாமணி’ என்ற பட்டத்தையும், 80% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று ‘ஜோதிட ரத்னா’ என்ற பட்டத்தையும் பெறத் தகுதி உடையவராகிறார். ஜோதிடத்தைத் தொழிலாகக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இச்சான்றிதழ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எமது நோக்கம் :

இப்பயிற்சி நிலையம் லாப நோக்கோடு இயங்காமல் சேவை எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே பயிற்சிக் கட்டணமானது நிறுவனம் செயல்படுவதற்கான அடிப்படை அத்தியாவசிய செலவினை மட்டுமே கருத்திற் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த பயிற்சிக் கட்டணத்தை அனைவரும் இன்முகத்துடன் ஏற்று இப்பயிற்சியினால் தாங்கள் அடையும் பெரும் பயனை கருத்திற் கொண்டு முழுமையாய் இப்பயிற்சியில் பங்கேற்று பயன் பெற கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் அன்புடன் அழைக்கிறது. முழுமையான ஜோதிடராக தங்களை மாற்ற வேண்டும் என்பதே எது நோக்கம். விரைந்த பயிற்சி, குறைந்த பயிற்சி காலம், நிறைந்த பாடம், முழுமையான வெற்றி. இதுவே எமது லட்சியம். பயிற்சி காலம் முடியும் வரை தாங்கள் செலுத்தும் கட்டணத்தைவிட தாங்கள் பெறும் பயன் வாழ்நாள் முடிய உள்ளதாகும்.

ஜோதிடக் கலையில் முழுமையாய் பயிற்சி பெற்று தாங்கள் புகழ் அடைய நமது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் தங்களை மனமார வாழ்த்துகிறது.

எமது உப சேவைப் பிரிவுகள் :
KAC COSMIC 2000 :     இந்த அதிநவீன கம்ப்யூட்டர் ஜோதிட மையம் துல்லியமான ஜாதகங்களை விரைவாகக் கணித்துக் கொடுக்கிறது.

கார்த்திகா ஜோதிடப் பேரவை :     தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட இந்த அமைப்பு ஜோதிடக் கலையையும், ஆன்மீகத்தையும் பரப்புவதற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறது.

நலமே விளைக.

நிர்வாகி
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
தாராபுரம்.

Scroll to Top