பிலவ வருஷம்
பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தருகும் – நலமில்லை
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்.
என்ற மொழிக்கேற்ப மங்கலகரமான இந்த தமிழ்ப் புத்தாண்டில் உலக மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், மன அமைதியையும், ஒருவருக்கொருவர் சமாதானத்துடன் எல்லா செல்வ சிறப்புகளையும் பெற்று மகிழ்ச்சியுடன் பெருவாழ்வு வாழ எமது நல்லாசிகள் அனைவருக்கும் உரித்தாகுக.