நிற ஜோதிடவியல்
(Astro Chromalogy)
தெளிவான வானத்தைப் பாருங்கள். எண்ணிலடங்கா நக்ஷத்திரங்கள், சூரிய மண்டலத்தைத் தாண்டி கண்ணுக்குப் புலனாகாத கோள்கள். வியப்பாகவும், பிரமிப்பாகவும் உள்ள இந்த பிரபஞ்சத்தில் சூரியனின் ஆதரவைத் தேடி சுழலும் நமது பூமி.
புராண இதிகாசங்களில் சூரிய பகவானுக்கு பல குழந்தைகள் உண்டு எனக் கூறப்பட்டிருந்தாலும் கண்கூடாக சூரியனின் அன்புக்குரிய ஒரே மகள் நாம் வாழும் பூமி (பூமாதேவி) தான். நம்மையெல்லாம் தாங்கி நிற்கும் இந்த பூமி தான் நமது அன்னை.
இயற்கை சக்திகள் நிறைந்த இந்த பூமியில் வாழும் மனித இனத்தைத் தவிர மற்ற விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றிற்கு ஒரு சில அடிப்படை நிறங்களைத் தவிர மற்ற எல்லா நிறங்களையும் அடையாளம் காணும் திறனில்லை.
மனிதன் மட்டும் இந்த பூமியில் உள்ள எல்லா நிறங்களையும் தனித்தனியே பிரித்து அடையாளம் காணும் சக்தியைப் பெற்றிருக்கிறான். அதுமட்டுமன்றி, நிறக்கலவை மூலம் நூற்றுக்கணக்கான உபநிறங்களையும் மனிதன் உருவாக்கி அவை ஒவ்வொன்றிற்கும் பெயரும் இட்டுள்ளான்.
இந்த பூமியில் உள்ள நிறங்கள் நமது வாழ்க்கையில் கலந்து விட்டதால் நிறத்தைப் பற்றிய சிந்தனை கூட நம்மில் இல்லாமல் போய்விட்டது. யாராவது சொன்னால் தான் நிறம் என்ற ஒன்றை நாம் உற்று கவனிக்க முடிகிறது. இவ்வாறுள்ள இந்த நிறத்தைப் பற்றி பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டிருந்தாலும், கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தை நிறுவிய குருஜி அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இயற்கை சக்தியாகிய நிறத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டார்கள். நிறவியல் (Chromalogy) என்ற பொருள் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட குருஜி அவர்கள், நிறங்கள் எந்த வகையில் மனித இயக்கத்தில் பங்கு பெறுகின்றன என்பதையும் ஆராய்ந்தார்கள். இதன் பயனாக விளைந்த அற்புதமான படைப்புதான் நிற ஜோதிடவியல் (Astro Chromalogy) என்பதாகும். நிற ஜோதிடவியலில் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் குருஜி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருத்தியல் கோட்பாடு (Doclrine Theory) இது ஆகும்.
சரியான பிரயோகத்தின் மூலம் நிறங்கள் மனித வாழ்வை வெற்றிகரமாகவும், அதிர்ஷ்டகரமாகவும் கொண்டு செல்லும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஒருவர் அணியும் ஆடையின் நிறம், அவர் பயன்படுத்தும் பொருட்களின் நிறம், அவர் வாழும் வீட்டின் உட்புற நிறம், அவர் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள பெரும்பான்மையான நிறம் ஆகியவை ஒருவரின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் கொண்டு செல்லும். துன்பங்களும், சவால்களும் வரும் பொழுது அவற்றை எதிர்கொள்ளும் சக்தியாகவும் ஒருவருடைய நிறம் உற்ற துணையாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஒருவரின் அதிர்ஷ்ட நிறத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பதையும், அதை பயன்படுத்தும் முறையைப் பற்றியும் கீழே விளக்கியுள்ளோம்.
ஒருவரின் பிறந்த நேரம், தேதி, கிழமை, மாதம், வருடம் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் மூல எண் கண்டுபிடிக்கப்படுகிறது. இதைக் கொண்டு அவரின் ஆளும் நிறம் கண்டுபிடிக்கப்படுகிறது. பின்னர் ஆதிக்க நிறம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த ஆளும் நிறம் மற்றும் ஆதிக்க நிறம் தான் ஒருவரின் அதிர்ஷ்ட நிறங்களாக இறுதி நிலைப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த நிறங்கள் மனித வாழ்வில் ஆதிக்கம் செய்யும் காலம் மூன்று முப்பது ஆண்டு காலப் பிரிவுகளாகவும் பகுக்கப்படுகின்றன. இந்த பகிர்வுக்குட்பட்ட காலத்தில் தான் நிறப் பிரயோகம் செய்யப்படுகிறது.
சுருக்கமாக, தங்களின் அதிர்ஷ்ட நிறத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் கீழே விளக்கியுள்ளவாறு தங்களின் பிறந்த காலத்தை உள்ளீடு செய்தல் வேண்டும். அதன் அடிப்படையில் தங்களின் அதிர்ஷ்ட நிறம் வெளிப்படும்.
பிறந்த வருடம் : yyyy
பிறந்த மாதம் : mm
பிறந்த தேதி : dd
பிறந்த நேரம் : hh / mm / ss
பகல் / இரவு : AM / PM
இவ்வாறு பிறந்த கால உள்ளீடுகளின் மூலம் பெற்ற அதிர்ஷ்ட நிறத்தைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கை நடைமுறைகளை நெறிப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அதிர்ஷ்ட நிறங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலும், தொலைப்பேசியிலும் தொடர்பு கொண்டு எமது நிறுவனத்தின் நிற ஜோதிடவியல் கொள்கை மூலம் பயன் பெற்று சிறப்பாக வாழ அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிர்வாகி
(நிற ஜோதிடவியல் பிரிவு)
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in
