கார்த்திகா வித்யா பவன் அறக்கட்டளை
(Karthika Vidhya Bhavan Trust)
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் என்ற நிறுவனத்தை உருவாக்கிய குருநாதர் அவர்கள் உலக மக்கள் அனைவரும் நலன்கள் பலவற்றைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கோடு 5-2-1997 அன்று கார்த்திகா வித்யாபவன் அறக்கட்டளை என்ற சேவை நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசுப் பதிவின் மூலம் உறுதி செய்யப்பட்ட இந்த அறக்கட்டளையின் தீர்மானங்கள் இந்திய வருமானவரித் துறை கடிதம் எண். C.1419(158)/96-97 Dated 7-4-97 இன் படி ஏற்பளிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகா வித்யா பவன் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு செயல்படுத்தப்படவிருக்கும் செயல் திட்டங்கள் (Action Plan) கீழ்க்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளன.
1. இந்தியாவிலும் உலகிலுள்ள மற்ற நாடுகளிலும் அருங்கலையாகிய ஜோதிடக் கலையை முறைப்படுத்தப்பட்ட ஜோதிடக் கல்வி மூலம் பரப்புதல்.
2. ஜோதிடம் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் வெளியீட்டின் மூலமும் பத்திரிக்கை நடத்துவதன் மூலமும் சிறப்புரைகள் ஆற்றுவதன் மூலமும் தெய்வக் கலையாகிய ஜோதிடக் கலையை உலகெங்கும் கொண்டு செல்லுதல்.
3. கோளரங்கம் (Planetarium) ஒன்றை நிறுவி அதன் மூலம் வானவியல் சாஸ்த்திரக் கல்வியை மக்களுக்குப் புகட்டுவது, வானவியல் தொலைநோக்கிகளை (Telescopes) நிறுவுவது, வானவெளி ஆய்வுக் கூடம் (Observatory) நிர்மாணிப்பது போன்ற ஜோதிட அறிவை அறிவியல் ரீதியாக உலக மக்களுக்கு எடுத்துச் செல்லுதல்.
4. அணுகுமுறை மற்றும் இலக்க முறை (Digital) புத்தக நூலகத்தை நிறுவி, அதில் ஜோதிடம், ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளிலுள்ள புத்தகங்களை ஒன்று திரட்டி பலரும் படிக்கும் வண்ணம் பராமரித்தல்.
5. உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆன்ம சக்தி மூலம் சிகிச்சையளித்தல்.
6. ரத்னக் கற்கள் அதிர்ஷ்டம் தருபவை மட்டுமல்ல. அவற்றின் கதிர் வீச்சு உடல் நலத்தையும், மன நலத்தையும் காக்கும் அருமருந்து. ரத்னக் கற்களால் வழங்கும் சிகிச்சை மற்ற சிகிச்சைகளை விட வித்தியாசமானது. தரமான ரத்னக் கற்களை பரிசோதித்து உபயோகப்படுத்தும் வகையில் ரத்னக் கற்கள் ஆய்வுக் கூடம் (Gemmological Laboratory) அமைத்து ரத்னக் கற்களை உரியவர்களுக்கு வழங்கி ரத்னக் கற்கள் ஆய்வுக் கூடத்திலேயே ரத்ன சிகிச்சையளித்து உதவுதல்.
7. நிற சிகிச்சை வழங்க புற இயக்க நிற சிகிச்சைக் கூடம் (Clinic of Physical Chroma Therapy) ஒன்றை நிறுவி மனநோய் மற்றும் உடல் நோயுற்றவர்களுக்கு நிற சிகிச்சையளித்து உதவுதல்.
8. இந்து வேத சாஸ்த்திரத்தை கற்பிக்கும் குருகுலம் ஒன்றை ஏற்படுத்தி இந்திய மக்களுக்கும், வெளிநாட்டு மக்களுக்கும் ஆன்மிக செயல்பாடுகளையும், ஆன்மிகக் கல்வியையும் பூஜை முறைகளையும் குருவின் மூலம் நேரடியாக சீடர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தல்.
9. ஜோதிடத் துறையின் பல்வேறு பிரிவுகள் மூலமும், ஆழ்நிலை தியானத்தின் (Transcendental Meditation) மூலமும் மக்களிடையே உள்ள மூட நம்பிக்கையைப் போக்கி உயர்வான சிந்தனையை ஊட்டுதல்.
10. கணினி மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி மூலிகைகள், சக்கரங்கள், ரத்னக் கற்கள் போன்ற ஜோதிடக் கலையிலுள்ள அனைத்து உபபிரிவுகளையும் ஆராய்ந்து அதை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தல்.
11. கலை, அறிவியல், கணக்கியல், பொறியியல், மருத்துவம் போன்ற பல துறை நவீன கல்விக் கொள்கைகளுக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை நிறுவி மக்களுக்கு சேவை செய்தல்.
12. அனைத்து மத, இன மக்களுக்கு லௌகீக வகையில் உதவும் திருமணத் தகவல் மையம் ஒன்றினை ஏற்படுத்தி திறம்பட நடத்துதல்.
13. முதியோர் நல வாழ்வு இல்லம், சுகாதார நிலையம், தியானக் கூடம் ஆகியவற்றை நிறுவி நேரடியாக மக்களுக்கு சேவை செய்தல்.
14. இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவி வழங்குதல்.
15. இந்திய மொழிகளாகிய ஹிந்தி, சம்ஸ்க்ருதம் போன்றவற்றைக் கற்பிக்கும் கல்விக் கூடம் அமைத்தல்.
16. தகுதியான நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து நன்கொடை பெறுதல்.
இவை அனைத்தையும் செயல்படுத்த தலைவர், நிர்வாக அறங்காவலர் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோரைக் கொண்ட கார்த்திகா வித்யாபவன் அறக்கட்டளை என்ற பேரமைப்பு இயங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளையின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளும் தன்னலமற்ற உயர்ந்த சிந்தனையுடையவர்கள் கார்த்திகா வித்யாபவன் அறக்கட்டளையின் செயல்பாடுகளில் இணைந்து பொது சேவை செய்ய அன்புடன் அழைக்கிறோம்.
தகுதி பெற்ற நன்கொடையாளர்கள் இந்திய வருமானவரிச் சட்டம் 1961 – இன் கீழுள்ள பிரிவு 18G – இன் படி வருமானவரி விலக்குப் பெறுவர்.
நிர்வாக அறங்காவலர்
கார்த்திகா வித்யா பவன் அறக்கட்டளை
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04258 – 220883, 290883
Mobile Phone : +91 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in
