குரு பெயர்ச்சி பலன்கள் 2022

நலமே விளைக.
ஸ்வஸ்திஸ்ரீ பிலவ வருஷம் பங்குனி மாதம் 30 – ஆம் தேதி குரு பகவான் மீன ராஸியில் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறார். இதனால் 14-4-2022 முதல் சுமார் ஓராண்டு காலம் ஜனங்களுக்கு நடக்க இருக்கும் ஜோதிட பலன்களை கீழே விவரித்துள்ளோம்.

மேஷ ராஸி :
தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டமும், விவசாயத்தில் சிரமமும் ஏற்படும். எதிரிகளால் கலகம், சட்டத்தினால் தண்டனை போன்ற அசுப பலன்கள் ஏற்படும். சேமித்த பொருள் விரயமாகும். நிலபுலன்கள் மீது பொருட் செலவு உண்டாகும். நீதிமன்ற விவகாரங்கள் ஏற்படும்.

ரிஷப ராஸி :
அரசியல்வாதிகளுக்கு ஆதாயமான காலம் இது. தடைபட்டு வந்த சுபகாரியம் இனிதே நடந்தேறும். வீடு மனை விருத்திக்கான காலம் இது. வேலை தேடுவோருக்கு உத்யோகம் அமையும். வாகனம், மின்னணு பொருட்கள் மீதான தொழிலில் லாபம் ஏற்படும். தரகுத் தொழில் கை கொடுக்கும்.

மிதுன ராஸி :
பற்றாக்குறையும், சேர்த்த பொருள் சேதமாதலும் இக்காலத்தில் நடக்கும். இதய நோய் ஏற்படும். நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளுதல் நல்லதல்ல. அரசு அலுவலர்களுக்கு இது ஒரு எச்சரிக்கைக் காலம். அரசியல்வாதிகள் இக்காலத்தில் தீவிரமாக அரசியலில் ஈடுபடுதல் நல்லதல்ல.

கடக ராஸி :
இடமாற்றம், வெளிநாட்டுப் பயணம் லாபம் தரும். பழைய கடன்கள் அடைபடும். வாகனம், நாற்கால் பிராணிகள் லாபகரமாக இருக்கும். மருத்துவர்கள் பொருள் சேர்ப்பர். பூர்வீகச் சொத்துக்கள் பலன் தரும். எதிர்பாராதவிதத்தில் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.

சிம்ம ராஸி :
இந்த ராஸிக்காரர்களுக்கு இது ஒரு சோதனைக் காலம். அரசாங்க உபாதைகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்களை செயல்படுத்த முடியாமல் போகும். வயிறு, இரத்தம் தொடர்பான நோய் ஏற்படும். எதிரிகளால் தொல்லை, மக்களால் மனக் கவலை ஆகியவை ஏற்பட்டு நீங்கும்.

கன்னி ராஸி :
இது ஒரு மகிழ்ச்சியான காலம். பெண்களுக்கு பெருமைகள் சேரும். திருமணம், வீடு, மனைகள் அமைதல், பிரிந்த குடும்பம் ஒன்று சேருதல், புதிய தொழில் முயற்சி பலிதமாகுதல் ஆகிய நற்பலன்கள் நடக்கும். எதிர்பாராத பொருள் வரவு ஒன்று ஏற்படும்.

துலாம் ராஸி :
சுவாச உறுப்புகளிலும், காலிலும் நோய் காணும். விரோதிகளால் அபகீர்த்தி ஏற்படும். சொத்துக்கள் விரயமாகும். நோயாளிகள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய காலம் இது. வெளிநாட்டு வாணிபத்திலும், உத்யோகத்திலும் பெரும் செலவு ஏற்பட்டு திருப்தியற்ற நிலை உண்டாகும்.

விருச்சிக ராஸி :
இழந்த கௌரவத்தை இந்த ராஸிக்காரர்கள் மீண்டும் பெறுவர். புதிய தொழில் முயற்சியில் மிகுந்த பொருள் ஈட்டுவர். புத்ர பாக்யம் இல்லாதோருக்கு புத்ர சந்தானம் ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவளிப்பார்கள். வீடு, மனை சேர்க்கைகள் ஏற்படும்.

தனுசு ராஸி :
தாயாருக்கு பீடையும், வாகனங்களால் கண்டமும் உண்டாகும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். பெண்களால் கலகமும் பொருள் சேதமும் பகையும் ஏற்படும். பூர்வீகச் சொத்து விரயமாகும். நிலபுலன்களால் நஷ்டங்கள் பல ஏற்படும்.

மகர ராஸி :
மனோபலம், உடல் பலம் குறையும். அதிக அலைச்சல், தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றம் ஆகியவை ஏற்படும். உடன்பிறப்புகளால் தொல்லை உண்டாகும். சிறுநீரகத்தில் நோய் உண்டாகும். இளைய சகோதரர்கள் வேறுபட்டு நிற்பர். புதிய தொழில் முயற்சிகளை இக்காலத்தில் தவிர்த்தல் நல்லது.

கும்ப ராஸி :
இந்த ராஸிக்காரர்களுக்கு இது ஒரு பொற்காலம் ஆகும். கல்வி சிறப்படையும். புதிய சொத்துக்கள் சேரும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு இனிதே திருமணம் நடந்தேறும். உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி, திடீர் பொருள் வரவு ஆகியவை ஏற்படும். உத்யோக முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மீன ராஸி :
இந்த ராஸிக்காரர்கள் அதிக அலைச்சலைக் காண்பர். அரசாங்க அதிகாரிகள் இடம் மாற்றப்படுவர். குடும்பத்தில் பிரிவும், மன நோயும் ஏற்படும். குடியிருப்பு மாறும். இடமாற்றமே சிறந்த பரிகாரம். நோயாளிகளும், வயோதிகர்களும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
இவை அனைத்தும் இந்திய ஜோதிட சாஸ்திர ரீதியான கோட்சார பொது பலன்களே. மற்ற கிரஹ சேர்க்கையாலும், பார்வையாலும், அவரவர் ஜாதக ரீதியான தசா புக்தி பலன்களாலும் மேற்கூறப்பட்ட குரு பெயர்ச்சி பலன்கள் மாறுபடலாம். இக்காலத்தில் உரிய பரிகாரங்களுடன் குரு பகவானை முறையாக வழிபாடு செய்து வருவது நல்லது.

மேற்கூறப்பட்ட ராஸிக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் அசுப பலன்களுக்காக குரு பகவானுக்கு ப்ரீதியும், சுப பலன்களுக்காக நன்றியும் செலுத்தும் முகமாக, நடக்க இருக்கும் பரிகார பூஜைகளில் கலந்து கொண்டு தெய்வாசீர்வாதத்தையும், குரு பகவானின் அருளையும் பெற்றுச் செல்லுமாறு இறையருளால் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நிர்வாகி
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,

227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
Phone : 04258 – 220883, 223033, 290883.
Mobile Phone : +91 94430 83109.

 

Scroll to Top