சனிப் பெயர்ச்சி பூஜை – 2020
நலமே விளைக.
நமது தாய் ஸ்தாபனமான தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் கடந்த 33 வருடங்களாக தமது ஜோதிட மாணவர்களை ஜோதிடத் துறையிலும் ஆன்மீக சேவைகளிலும் சிறப்பாக ஈடுபடுத்தி மனநிறைவு பெற்று வருகிறது என்பதைத் தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
நமது குருநாதர் அவர்கள் பெற்ற தெய்வ உத்தரவை செயல்படுத்தும் வகையில் இந்த வருடமும் சனிப் பெயர்ச்சி பூஜைகளை விடுபடாமல் செய்துவிட வேண்டும் என நிர்வாகக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் ஒரு அங்கமாகிய கார்த்திகா ஜோதிடப் பேரவையின் செயலாளர் ஜோதிட ரத்னா ஆர். விநாயகம் மற்றும் பொருளாளர் ஜோதிட ரத்னா தி. தங்கவேல் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்த பின்னர் கீழ்க்கண்ட விபரங்கள் அறிவிக்கப்படுகின்றன.
1. சனிப் பெயர்ச்சி பூஜைகள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5-18 மணிக்கு நமது குரு பீடத்தில் நடைபெறும்.
2. சனிப் பெயர்ச்சி நடைபெறும் அந்த நேரத்தில் அவரவர் இருப்பிடத்திலேயே இருந்து கொண்டு தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
3. அர்ச்சனை செய்ய விரும்புவோர் தங்களின் நக்ஷத்திரம், பெயர், முழு முகவரி ஆகியவற்றை தெரிவித்தால் சனிப் பெயர்ச்சி பூஜை முடிந்த உடன் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
4. பரிகாரம் செய்ய விரும்புவோர் தங்களின் நக்ஷத்திரம், பெயர், செய்து கொள்ளவிருக்கும் பரிகாரம், முழு முகவரி ஆகியவற்றைத் தெரிவித்தால் பரிகாரம் செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
5.மற்றுமுள்ள அருட் பிரசாதங்களைப் பெற விரும்புவோர் ஏற்கனவே உள்ள நமது நிலைய நடைமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ளலாம்.
6. COVID-19 -இன் காரணமாக நமது அரசாங்கம் அறிவித்த கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் வகையில் மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு இந்த பூஜையின் பொழுது யாரும் நேரில் வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
7. COVID-19 பெருந்தொற்று நோய் பரவுதலின் காரணமாக இவ்வாண்டு இலவச ஜோதிட முகாம் நடைபெறாது.
நாம் தெரிவித்துள்ள மேற்காணும் விதிமுறைகளை பின்பற்றி இந்த சனிப் பெயர்ச்சி பூஜை சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கி இறையருளை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நலமே விளைக.
நமது குருநாதர் அவர்களின் நல்லாசியுடன்,
நிர்வாகி,
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைப் பேசி எண் : 04258 – 220883, 223033, 290883.
நகர்வு தொலைப் பேசி எண் : +91 94430 83109
e-mail : karthikasiddarth@yahoo.co.in