திருக்கணித ஜாதகம்
மனித வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முன்னதாகவே கண்டுணர்ந்து கூறுவது ஜோதிட சாஸ்திரம் ஆகும். இதற்கு ஜாதகம் என்னும் மாயக் கண்ணாடி ஒவ்வொரு மனிதப் பிறப்பில் உள்ளவருக்கும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
முறையாகக் கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து ஜோதிட வல்லுநர்கள் ஒருவரின் வாழ்வில் ஏற்படப்போகும் எதிர்கால ஏற்றத்தாழ்வுகளை தெளிவாகத் தெரிவித்து விடுகின்றனர். ஜோதிடர்களின் இந்த ஜாதகத் தெளிவுரை ஒரு ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்து விடுகிறது.
ஜோதிட வித்வான்களுக்கு உதவும் வகையில் ஜோதிட பலன்களை தெளிவாக எடுத்துரைக்க கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் ஜாதக கணிதம் செய்து வழங்கும் பிரிவு திறம்பட இயங்கி வருகிறது.
எமது ஜாதகக் கணிதப் பிரிவில் கணித்து வழங்கும் ஜாதகம் எவற்றையெல்லாம் கொண்டிருக்கும் என்ற விபரங்களை கீழே விளக்கியுள்ளோம்.
மிகவும் நுட்பமாகவும், துல்லியமாகவும் ஜாதகம் கணிப்பதற்கு எமது நிலையத்திலுள்ள அதிநவீன கணினி பயன்படுத்தப்படுகிறது.
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் தெளிவாகவும், துல்லியமாகவும் கணித்து வழங்கும் ஒரு ஜாதகத்தில் கீழ்க்கண்ட ஜோதிட விபரங்கள் இடம் பெற்றிருக்கும்.
ஜாதக கணிதம் செய்வதற்கு ஒருவர் எமது நிலையத்திற்குக் கொடுக்கும் உள்ளீட்டுத் தரவுகளின் அடிப்படையில் ஜாதகம் கணிக்கப்படுகிறது.
கணிக்கப்பட்ட ஜாதகத்தில், ஜாதகர் பிறந்த ஆங்கில நேரம், தேதி, மாதம், வருடம் மற்றும் தமிழ் ஆண்டு, மாதம், தேதி, கிழமை, பிறந்த நாளன்று கலியுக வருடம், கலியுகம் தோன்றி ஜனன தேதி முடிய சென்ற மொத்த நாட்கள், ஜனன தேதியன்று ஜனன இடத்தின் சூரிய உதய நேரம், சூரிய அஸ்தமன நேரம், உதயாதி நாழிகை ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
துல்லியமாக கணிக்கப்பட்ட நிராயன கிரஹ ஸ்புடம், பாகை, கலை, விகலைகள், நக்ஷத்திர கிரஹ பாதசாரம், நக்ஷத்திராதிபதி, உப நக்ஷத்திராதிபதி ஆகியவை இந்த ஜாதகத்தில் இடம் பெறுகின்றன.
கிரஹ வக்ர நிலை, கிரஹ உச்ச, நீச்ச விபரங்கள், திதி, யோகம், ஜனன காலத்தின் பொழுது கிரஹ தசை இருப்பு, யோக, அவயோக கிரஹங்கள், திதி சூன்ய ராஸிகள் ஆகியவை இந்த ஜாதகத்தில் தெளிவாகக் கணிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.
திருக்கணிதப்படி கணிக்கப்பட்ட ராஸி, அம்ஸம், பாவக நிலை, பாவக சக்கரம், திரேகாணம், துவாதஸாம்சம், சப்தமாம்சம் ஆகிய ஜாதகச் சக்கரங்கள் துல்லியமாகக் கணிக்கப்பட்டு இந்த ஜாதகத்தில் இடம் பெற்றிருக்கும்.
கணிக்கப்பட்ட ஜாதகத்தில், ஜாதகரின் பிறந்த தேதி முதல் அவரின் ஆயுட்காலம் வரையுள்ள தசாபுக்தி விபரங்கள் ஆங்கிலத் தேதி, மாத, வருட வாரியான விபரங்கள் இருக்கும்.
அவரவர் ஜாதக ரீதியாக உள்ள அதிர்ஷ்ட எண், ஆதாய விரய எண்கள், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்டக் கிழமை, அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினக்கல், வழிபடு தெய்வம், ஜாதகப்படி உள்ள வழிபாட்டிற்குரிய தெய்வத் திருத்தலம் போன்ற விபரங்கள் இந்த ஜாதகத்தில் இடம் பெற்றிருக்கும்.
செவ்வாய் தோஷம், இன்னும் பல ஜாதக தோஷங்களை தெரிந்து கொள்வதற்கு எமது நிலையம் கணித்து வழங்கும் ஜாதகத்திலுள்ள ராஸி, அம்ஸம் மற்றும் பாவக நிலைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
எமது நிலையம் கணித்து வழங்கும் ஜாதகம் பாதுகாப்பான நெகிழி (Plastic) உறையுடன் கூடியதாகவும், 8 ¼” x 6 ¼” அளவுள்ளதாகவும், 24 பக்கங்களைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும்.
தெளிவான அச்சு, எளிதில் கிழியாத வெள்ளைத் தாட்கள் ஆகிய இவை எமது நிலையம் கணித்து வழங்கும் ஜாதகத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்ப சிறப்புகள் ஆகும்.
எமது நிலையம் கணித்து வழங்கும் ஜாதகத்தின் பயன்கள் :
ஒரு ராஸியின் சந்திராஷ்டமம் என்னும் சந்திரன் மறைவு காலத்தைக் கண்டுபிடித்து சுப காரியங்களை செய்வதற்குத் திட்டமிட முடியும். குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், கல்வி தொடங்குதல், திருமண சுப முகூர்த்தம் நிர்ணயித்தல், க்ருஹ பிரவேசம் செய்ய சுப நாள் குறித்தல், தொழில், வியாபாரம் தொடங்குதல் தொடர்பான சுப நாட்களை முடிவு செய்தல், மேலும் பல வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் தேதிகளை உறுதி செய்தல், அரசியல் காரியங்களில் ஈடுபடும் பொழுது நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுத்தல், நீதிமன்ற வழக்குகளை பதிவு செய்தல், பதவி ஏற்பு ஆகிய முக்கியமான காரியங்களில் ஈடுபடும் பொழுது நல்ல நேரம் பார்த்தல் ஆகியவற்றிற்கு எமது நிலையத்தால் கணிக்கப்பட்ட ஜாதகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதுவரை ஜாதகம் இல்லாதவர்கள் எமது நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தங்களின் ஜாதகத்தைக் கணித்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே தங்களிடம் ஜாதகம் இருப்பின் அது சரியாகக் கணிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க எமது நிலையத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
புதியதாக ஜாதகம் கணித்துப் பெற விரும்புவோர் அதற்கென உள்ள படிவத்தை எமது நிறுவனத்திடமிருந்து பெற்று முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பி வைத்து பயனுள்ள திருக்கணித ஜாதகத்தை எமது நிலையத்திலிருந்து கணித்துப் பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிர்வாகி
(ஜாதக கணிதப் பிரிவு),
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in
