சனிப் பெயர்ச்சி பூஜைகள்
நலமே விளைக.
ஸ்வஸ்திஸ்ரீ விசுவாவசு வருஷம் மாசி மாதம் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்கியப் பஞ்சாங்க ரீதியாக சனி பகவான் காலை 8-26 மணி அளவில் மீன ராஸிக்குப் பெயர்ச்சியாவதை முன்னிட்டு 6-3-2026 அன்று காலை 7-00 மணிக்குத் தொடங்கி தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன.
ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், கலச ஆவாஹனம், புண்யாஹவாஜனம் ஆகிய புனஸ்காரங்களுடன் தொடங்கி நடக்கவிருக்கும் விசேஷ பூஜைகள் விபரங்களை கீழே விளக்கியுள்ளோம்.
சகல விக்னங்களையும் போக்கும் மஹா கணபதி பூஜையும், சகல கிரஹ தோஷங்களை நீக்கும் நவகிரஹ பூஜையும், நீண்ட ஆயுளை வழங்கும் ஆயுஷ்ய பூஜையும், கல்வியையும் ஞானத்தையும் வழங்கும் சுப்ரமண்ய காயத்ரியால் பூஜையும், இறையருளையும், உத்யோக மேன்மையையும் வேண்டி நிற்கும் புருஷ ஸுக்த பூஜையும், ஸ்ரீஸுக்த பூஜையும், தடைபட்டு வரும் திருமணத்தை தடங்கலின்றி நடத்திக் கொடுக்கும் சுயம்வரா பார்வதி பூஜையும், புத்ர சந்தான பாக்யத்தை விரும்பியவாறு அருளும் சந்தான கோபால கிருஷ்ண பூஜையும், துர்மரணம் என்னும் அப ம்ருத்யுக்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய பூஜையும், மஹாவிஷ்ணுவின் அருளால் பில்லி, சூன்ய ஏவல்கள், தீய சக்தி இவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கும் மஹா சுதர்ஸன பூஜையும், எதிரிகளிடமிருந்து பாதுகாப்ப வழங்கும் ஸ்ரீ துர்கா பூஜையும், பொருட் செல்வத்தை
சேர்க்கவும், சேர்த்த செல்வத்தை விரயமாகாமல் பாதுகாக்கவும் செய்யப்படும் குபேர பூஜையும், கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கவும், உரிமைகள் பறி போகாமல் இருக்கவும் வகை செய்கின்ற கார்த்த வீர்யாய பூஜையும், உலக மக்கள் க்ஷேமமாக இருக்கவும், உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காக செய்யப்படும் மத்ய ஐக்ய பூஜையும், உலக மக்கள் நோய்களிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுபட்டு சுகமான வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும், நாட்டை ஆளும் தலைவர்கள் நற்சிந்தனையுடனும், மதிநுட்பத்துடனும் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் இறைவனை பிரார்த்தித்து நடத்தப்படும் இந்திர அபயங்கர பூஜையும் செய்யப்பட உள்ளன.
இந்த பூஜைகளில் மூல மந்திரங்களாலும், ஜபங்களாலும் உருவேற்றப்பட்ட திருஷ்டி சக்கரங்கள், வாஸ்து சக்கரங்கள், குபேர தனாஹர்ஷண சக்கரங்கள், சுதர்ஸன சக்கரங்கள், ஸ்ரீ சக்கரங்கள், மஹாலக்ஷ்மி சக்கரங்கள், விநாயகர் கவசங்கள், ஆஞ்ஜநேயர் கவசங்கள், சுப்ரமண்யர் கவசங்கள், பலவகை ருத்ராட்சங்கள், ரஸமணிகள், ராஜ வஸிய மூலிகைக் குங்குமம், அதிர்ஷ்ட ராஸிக் கற்கள், ஸ்வர்ண ஸ்படிக மாலைகள், முத்து மாலைகள், நவரத்ன மாலைகள் ஆகியவை படைக்கப்பட்டு தேவைப்படுவோருக்கு வழங்கப்பட உள்ளன.
இறையருள் சூழ்ந்து நிற்கும் இந்த பூஜைகளின் பொழுது அர்ச்சனைகள் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஆன்மிக அன்பர்கள் அர்ச்சனைகளில் பங்கேற்று தெய்வ அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த சனிப் பெயர்ச்சி பூஜைகளில் தாங்கள் பங்கேற்பதால் சகல தேவதைகளின் அருளாசியையும், விதிப்படி சனி பகவானால் வரும் சிரமங்களை குறைத்துக் கொள்ளவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த சிறப்புமிக்க பூஜைகளில் கலந்து கொள்ளுமாறு இறைவனின் திருவருளால் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பூஜைகள் நடைபெறும் இடம்
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம், தாராபுரம்.
நிர்வாகி
(கார்த்திகா பூஜா அமைப்புப் குழு),
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : Karthikasiddarth@yahoo.co.in
