குரு பெயர்ச்சி ஹோமம் அழைப்பிதழ்
அன்புடையீர், நலமே விளைக.
ஸ்வஸ்திஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 17 – ஆம் தேதி குருபகவான் கன்னி ராஸியிலிருந்து துலாம் ராஸிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு 2-9-2017 சனிக்கிழமையன்று அதிகாலை 5-00 மணி தொடங்கி விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன.
புராண சிறப்பு மிக்க தாராபுரம் மாநகரில் 227, ஹனுமந்தாபுரம், தாராபுரம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் அமைந்துள்ள கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் சார்பாக 2-9-2017 சனிக்கிழமை அதிகாலை 5-00 மணிக்கு சங்கல்பம், கலச ஆவாஹனம், ஜபம் ஆகிய புனஸ்காரங்களுடன் குரு பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், பரிகார பூஜைகளும், அதன் பின்னர் ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் தொடங்கி சகல கிரஹ தோஷங்களை நீக்கும் நவகிரஹ ஹோமமும், நீண்ட ஆயுளை வழங்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமமும், புத்ர சந்தான பாக்யத்தை வழங்கும் சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும், சகல சம்பத்துக்களையும் வழங்கும் ஸ்ரீ ஸூக்த ஹோமமும், புருஷ ஸூக்த ஹோமமும், பில்லி சூன்ய ஏவல்களிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பு வழங்கும் மஹா சுதர்ஸன ஹோமமும், எதிலும் வெற்றியைக் கொடுக்கும் ஸ்ரீ துர்கா ஹோமமும், கல்வியையும் ஞானத்தையும் வழங்கும் சுப்ரமண்ய காயத்ரி ஹோமமும், தடைப்பட்டு வரும் திருமணத்தை உடனே நடத்திக் கொடுக்கும் சுயம்வரா பார்வதி ஹோமமும், சகல நோய்களையும் குணமாக்கும் தன்வந்த்ரி ஹோமமும், செல்வத்தை அள்ளித் தரும் சிறப்பு மிக்க குபேர ஹோமமும் மற்றும் சக்தி வாய்ந்த பல ஹோமங்களும் நடைபெற உள்ளன.
இந்த ஹோம பூஜைகளில் ஒரு லக்ஷத்து எட்டு மூல மந்திரங்களாலும், ஜப, தப, ஹோம தர்ப்பணம் என்ற புனஸ்காரங்களாலும் உருவேற்றப்பட்ட திருஷ்டி சக்கரங்கள், சுதர்ஸன சக்கரங்கள், ஸ்ரீ சக்கரங்கள், மஹாலக்ஷ்மி சக்கரங்கள், விநாயக ரக்ஷைகள், ஆஞ்ஜநேய ரக்ஷைகள், குரு ரக்ஷைகள், ஒருமுக மற்றும் இருமுக ருத்ராட்சங்கள், ரஸமணிகள், ராஸிக் கற்கள், ராஜ வஸீய குங்குமம், ஸ்வர்ண ஸ்படிக மாலைகள், முத்து மாலைகள், நவரத்ன மாலைகள் ஆகியவை படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த அருட் செல்வங்கள் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும். கல்வி சிறப்படையும். பிணி தீரும். ஆயுள் விருத்தியாகும். திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விரும்பியவாறு புத்ர பாக்யம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் பெருகி தனம் சேரும். விவசாயம் மேன்மை அடையும். உத்யோகத்தில் பாதுகாப்பு கிடைக்கும். எதிரிகள் தொல்லை விலகும். கிரஹ தோஷங்கள் நீங்கும். மேலும் பல இஷ்டார்த்த சித்திகளும் ஏற்படும்.
ஆன்மீக அன்பர்கள் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சி ஹோம பூஜைகளிலும், பரிகார பூஜைகளிலும் கலந்து கொள்வது குறித்தும் மேற்காணும் அருட் பிரசாதங்களின் தேவை குறித்தும் எமது நிர்வாக அலுவலகத்தை உடனே தொடர்பு கொண்டு தங்கள் தேவையை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பூஜையில் கலந்து கொள்வோர்க்கு அர்ச்சனைகளும், பரிகாரங்களும் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சக்தி வாய்ந்த இந்த ஹோமங்களிலும், பரிகார பூஜைகளிலும், அர்ச்சனைகளிலும் ஆன்மீக அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு குரு பகவானின் அருளாசியையும், சகல தேவதைகளின் அருட் பிரசாதத்தையும் பெற்றுச் செல்லுமாறு இறைவனின் திருவருளால் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
பூஜைகள் நடைபெறும் இடம் : செல்வம் கல்யாண மண்டபம், உடுமலை ரோடு, தாராபுரம்.
தலைவர்
கார்த்திகா பூஜா அமைப்புக் குழு,
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு.
Phone : (04258) 220883, 223033. FAX : 04258 223033.
Cell : 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in
Website : www.karthika-astroservices.org