கார்த்திகா அதிர்ஷ்ட நவரத்ன ராஸிக் கற்கள் பிரிவு
இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு அசல் ரத்தினக் கல்லும் அதனதன் இயற்கையான அடர்த்தி எண்ணுக்கும், நிறத்திற்கும் ஏற்ப ஒளியையும், மின் காந்த சக்தியையும் உமிழும் குணம் கொண்டது. இயற்கை கற்களின் குணத்தைப் புரிந்து கொண்டு முறையாகவும் சரியான கோணங்களிலும் அந்தந்த ரத்தின கற்களின் இயற்கையான மின் காந்த கதிர் வீச்சுக்கள் சேதமடையாமலும் சரியான முறையில் பட்டை தீட்டியும் உருவாக்கினால் இயற்கையான ஒரு ரத்னக் கல் அபரிமிதமான சக்தியை வெளிவிடும் குணம் கொண்டதாக அமைந்து விடும். இந்த சூட்சுமத்தை கண்டுணர்ந்து மேற்கூறப்பட்டவாறு உருவாக்கி கார்த்திகா அதிர்ஷ்ட நவரத்ன ராஸிக் கற்கள் பிரிவில் சேர்த்து இறைவனின் அருளைக் கூட்டும் பூஜைகளுக்கு உட்படுத்தி இதனை விரும்பி ஏற்றுக் கொள்வோருக்கு நல்லாசியுடன் இப்பிரிவு வழங்கி வருகிறது.
ஒவ்வொரு ரத்ன ராஸிக் கல்லின் வியாபார விலை மதிப்பைக் காட்டிலும் ஒரு ரத்னக் கல் பூஜைகள் மூலம் பன்மடங்கு உயிரூட்டம் பெறுவதால் அதன் மதிப்பு எண்ணிலடங்காத அளவிற்கு அதிகரித்துவிடுகிறது. எனவே இந்த ரத்ன ராஸிக் கற்களை வியாபார நோக்கோடு மதிப்பிடுதல் ஏற்புடையதல்ல. இந்த அதிர்ஷ்ட நவரத்ன கற்களை பயன்படுத்தி அதனால் பெறும் சக்தியை ஆதாரமாகக் கொண்டே மதிப்பிடுதல் வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு ரத்ன ராஸிக் கல் ஏற்புடையதாகவும், பொருத்தமுள்ளதாகவும், அவரவர் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கும். இதனை கவனமாகக் கணக்கிட்டறிந்து முறையாக தேர்வு செய்து கார்த்திகா அதிர்ஷ்ட நவரத்ன ராஸிக் கற்கள் பிரிவின் பரிந்துரைப்படி அணிந்து கொள்வதன் மூலம் பெறும் பலன்களை அளவிட்டுக் கூற இயலாது.
ஒவ்வொரு அதிர்ஷ்ட நவரத்ன ராஸிக் கல்லையும் யார் யார் அணிந்து பயனடைவர் என்பதை கீழே நாம் கொடுக்கும் விபரங்களைப் படித்து தெரிந்து கொள்வதுடன் தங்களுக்குரிய அதிர்ஷ்ட நவரத்ன கல்லையும் தேர்ந்தெடுத்து அணிந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாணிக்கம் (Ruby)
அடர்த்தி எண் 4 – ஐ கொண்ட இந்த அடர்த்தியான ரத்தச் சிவப்பு நிற ரத்தினம் வெற்றியையும், ஆளுமையையும் குறி வைத்துச் செல்லும் வேகமான கதிர் வீச்சைக் கொண்டது. 1 என்ற உயிர் எண்ணைக் கொண்டு 1, 10, 19, 28 ஆகிய ஆங்கிலத் தேதிகளில் பிறந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமை அல்லது ஜுலை 21 முதல் ஆகஸ்ட் 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்களும் சிம்ம ராஸிக்குரிய மாணிக்கக் கல்லை மோதிரத்தில் பதித்தோ அல்லது வேறு அணிகலன் மூலமாகவோ அணிந்து கொண்டால் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள்.
இதன் மதிப்பு $ 200.
முத்து (Pearl)
அடர்த்தி எண் 4 – ஐ கொண்ட இந்த அடர்த்தியான ரத்தச் சிவப்பு நிற ரத்தினம் வெற்றியையும், ஆளுமையையும் குறி வைத்துச் செல்லும் வேகமான கதிர் வீச்சைக் கொண்டது. 1 என்ற உயிர் எண்ணைக் கொண்டு 1, 10, 19, 28 ஆகிய ஆங்கிலத் தேதிகளில் பிறந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமை அல்லது ஜுலை 21 முதல் ஆகஸ்ட் 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்களும் சிம்ம ராஸிக்குரிய மாணிக்கக் கல்லை மோதிரத்தில் பதித்தோ அல்லது வேறு அணிகலன் மூலமாகவோ அணிந்து கொண்டால் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள்.
இதன் மதிப்பு $ 75.
புஷ்பராகம் (Topaz)
அடர்த்தி எண் 4 – ஐக் கொண்ட இந்த மஞ்சள் நிற ரத்தினம், ஆன்மீக உணர்வையும், மங்களகரமான சிந்தனையையும் உடைய கதிர் வீச்சைக் கொண்டது. 3 என்ற உயிர் எண்ணைக் கொண்டு 3, 12, 21, 30 ஆகிய ஆங்கில தேதிகளில் பிறந்தவர்களும், வியாழக்கிழமை அல்லது நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்களும் தனுசு ராஸிக்குரிய புஷ்பராகம் என்ற ரத்தினத்தை மோதிரத்தில் பதித்தோ அல்லது வேறு அணிகலம் மூலமாகவோ அணிந்து கொண்டால் பல நற்பலன்களைப் பெறுவார்கள்.
இதன் மதிப்பு $ 150.
கோமேதகம் (Garnet)
அடர்த்தி எண் 3.9 – ஐக் கொண்ட இந்த தேநீர் போன்ற பழுப்பு நிற ரத்தினம் எதிலும் வீரியத்தை வழங்கும் கதிர் வீச்சைக் கொண்டது. 4 என்ற உயிர் எண்ணைக் கொண்டு 4, 13, 22, 31 ஆகிய ஆங்கிலத் தேதிகளில் பிறந்தவர்கள், செவ்வாய் கிழமை அல்லது அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் விருச்சிக ராஸிக்குரிய கோமேதகம் என்ற ரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொண்டால் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
இதன் மதிப்பு $ 50.
மரகதம் (Emerald)
அடர்த்தி எண் 2.8 – ஐக் கொண்ட இந்த பச்சை நிற ரத்தினம் அமைதியையும், வளத்தையும் வழங்கும் கதிர் வீச்சைக் கொண்டது. 5 என்ற உயிர் எண்ணைக் கொண்டு 5, 14, 23 ஆகிய ஆங்கிலத் தேதிகளில் பிறந்தவர்கள், புதன்கிழமை அல்லது மே 21 முதல் ஜுன் 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் மிதுன ராஸிக்கும், ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் கன்னி ராஸிக்கும் உரிய மரகதம் என்ற ரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொண்டால் பல நற்பலன்களைப் பெறுவார்கள்.
இதன் மதிப்பு $ 200.
வைரம் (Diamond)
அடர்த்தி எண் 3.5 – ஐக் கொண்ட இந்த நிறமற்ற ரத்தினம் சமாதானத்தையும், செல்வத்தையும், வெற்றியையும் வழங்கும் கதிர் வீச்சைக் கொண்டது. 6 என்ற உயிர் எண்ணைக் கொண்டு 6, 15, 24 ஆகிய ஆங்கிலத் தேதிகளில் பிறந்தவர்கள், வெள்ளிக்கிழமை அல்லது ஏப்ரல் 20 முதல் மே 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் ரிஷப ராஸிக்கும், செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் துலாம் ராஸிக்கும் உரிய வைரம் என்ற ரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொண்டால் ஏராளமான நற்பலனைப் பெறுவார்கள்.
இதன் மதிப்பு $ 1000.
அல்லது
வைரத்தின் குணம் கொண்ட வெள்ளைக்கல் $ 100.
வைடூரியம் (Cat’s Eye)
அடர்த்தி எண் 2.7 – ஐக் கொண்ட இந்த வெளிர் பழுப்பும், மஞ்சள் கலந்த பச்சையும், பூனைக் கண் போன்ற நூலோட்டமும் அமையப் பெற்ற இந்த ரத்தினம் அறிவாற்றலை வழங்கும் கதிர்வீச்சைக் கொண்டது. 7 என்ற உயிர் எண்ணைக் கொண்டு 7, 16, 25 ஆகிய ஆங்கிலத் தேதிகளில் பிறந்தவர்கள், வெள்ளிக் கிழமை அல்லது பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் மீன ராஸிக்குரிய வைடூரியம் என்ற ரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து வர பல நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
இதன் மதிப்பு $ 150.
நீலக்கல் (Spphire)
அடர்த்தி எண் 2.8 – ஐக் கொண்ட இந்த நீல நிற ரத்தினம் பெருந்தன்மை, நீதி ஆகியவற்றை சிந்திக்கும் கதிர்வீச்சைக் கொண்டது. 8 என்ற உயிர் எண்ணைக் கொண்டு 8, 17, 26 ஆகிய ஆங்கிலத் தேதிகளில் பிறந்தவர்கள், சனிக்கிழமை அல்லது டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் மகர ராஸிக்கும், ஜனவரி 21 முதல் பிப்ரவரி 18 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் கும்ப ராஸிக்கும் உரிய நீலக்கல் என்ற ரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து வர நன்மைகள் பலவற்றைப் பெறுவார்கள்.
இதன் மதிப்பு $ 200.
பவழம் (Coral)
அடர்த்தி எண் 2.3 – ஐக் கொண்ட இந்த சிவப்பு, வெளிர் சிவப்பு நிற ரத்தினம் வீரத்தைப் பிரதிபலிக்கும் கதிர்வீச்சைக் கொண்டது. 9 என்ற உயிர் எண்ணைக் கொண்டு 9, 18, 27 ஆகிய ஆங்கிலத் தேதிகளில் பிறந்தவர்கள், செவ்வாய்க்கிழமை அல்லது மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 முடிய உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் மேஷ ராஸிக்குரிய பவழம் என்ற ரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொண்டால் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள்.
இதன் மதிப்பு $ 50.
அவரவர் ராஸிக்குரிய ரத்தினக் கல்லை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் உடல் நோய் வரும் முன்னரே ராஸிக் கல்லின் நிறம் மாறுவதை கண்கூடாகக் காணலாம். மனம் அமைதியாகும். நினைவாற்றல் மிகும். தீய கனவுகள் வராது. நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். உடலில் சுறுசுறுப்பு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளைக் கையாளும் அறிவுத் திறன் உண்டாகும். வியாபாரம் விருத்தியாகும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ஆசிரியர், எழுத்தாளர்கள், வழக்கறிஞர், நீதிபதிகள், ஜோதிட வித்வான்கள், அருள் வாக்குக் கூறுவோர், கோவில் பூஜை மற்றும் நிர்வாகத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டோர், அறநிலையங்களில் பணியாற்றுவோர், தியானத்தில் ஈடுபடுவோர், மருத்துவர்கள், வியாபாரிகள், விவசாயத் தொழிலில் உள்ளோர், விஞ்ஞானிகள், வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், சினிமா, சங்கீதம், நாடகம் போன்ற கலைத்துறையில் உள்ளோர், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், ராணுவம், காவல் துறை, சுரங்கத் தொழில் போன்ற ஆபத்தான தொழிலில் உள்ளவர்கள் போன்றோருக்கு மிகுந்த பாதுகாப்பையும், உடனடியாக நல்ல தீர்மானம் எடுக்கும் கூர்மையான புத்தியையும் மற்றும் பல எண்ணிலடங்கா நற்பலன்களை இந்த ராஸிக் கற்கள் வழங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. செய்வினைக் கோளாறு, பில்லி, சூன்ய, ஏவல்கள், பிரேத உபாதை ஆகிய தீய சக்திகளிலிருந்து முழுமையான பாதுகாப்பு கொடுக்கும். இதயம், ஜீரண உறுப்புகள், மூளை, சிறுநீரகம், கண் பார்வை, மற்றுமுள்ள உடற்புலன்கள், நரம்பு மண்டலம் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை படிப்படியாக குணமாக்கும். உயர் மற்றும் தாழ்ந்த ரத்த அழுத்தம், நாள்பட்ட பல வியாதிகள் ஆகியவற்றை படிப்படியாகக் குறைக்கும்.
கார்த்திகா அதிர்ஷ்ட நவரத்ன ராஸிக் கற்கள் பிரிவிலுள்ள அசல் ராஸிக் கற்களுக்கு அதனதன் கிரஹங்களையும், அதிதேவதைகளையும் உபாசனை செய்து உருவேற்றி இவற்றை வேண்டுவோருக்கு வழங்கி வருகிறோம். முற்றிலும் அசலாகவும், தரமானதாகவும் ரத்தின பரிக்ஷைக்கு உட்படுத்திய அதிர்ஷ்ட நவரத்ன ராஸிக் கற்களை மட்டுமே அதற்குரிய பூஜை செய்து வழங்கி வருகிறோம். கிரஹ தோஷங்கள் உள்ளவர்கள் அவரவர் அதிர்ஷ்ட ராஸிக் கல்லை தேர்ந்தெடுத்து அணிந்து பல நலன்களை பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
தெய்வ சக்தி வாய்ந்த அதிர்ஷ்ட நவரத்ன ராஸிக் கற்கள் வேண்டுவோர் உரிய தொகையை தாராபுரம் என்ற ஊரில் மாற்றத் தக்க வகையில் எடுக்கப்பட்ட Demand Draft மூலமாகவோ அல்லது Money Order மூலமாகவோ அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் முகவரியில் இயங்கும் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிர்வாகி
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம்,தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
போன் : (04258) 220883, 223033. FAX : 04258 223033.
Mobile Phone : 94430 83109
karthikasiddarth@yahoo.co.in