எங்களைப் பற்றி
ஆன்மீக சிந்தனை கொண்ட குருஜி அவர்கள் இறைவனின் தூண்டுதலால் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் என்ற ஜோதிட குருகுலத்தைத் தொடங்கி இவ்வுலக நடைமுறைக்கேற்ப இதற்கு அரசாங்கத்திடம் ஒப்புதலும் பெற்றார்கள். கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் என்ற பெயர் குருஜி அவர்கள் சிந்தனையில் உதித்த ஒன்று. பிள்ளையார் சுழி, ஓம் என்ற திரிசப்த ரீங்கார ப்ரணவ மந்திரம், ஸ்ரீ கோமதி சங்கர நாராயணாய நம : என்ற வழிபாட்டுச் சொற்கோவை, மகேஸ்வரன் உறையும் சிவலிங்கம், மஹாவிஷ்ணுவை மனதிற் கொள்ளும் சங்கு, சக்கரம், திருக்குமரனின் வேலுடன் இணைந்து நிற்கும் மஹாசக்தியின் சூலாயுதம் என சைவ, வைஷ்ணவ சம்பிரதாய பேதங்களை அறுத்து, ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து மங்களமான மஞ்சள் நிற ஆடை, நெற்றியில் செஞ்சாந்து என அண்டத்தின் தத்துவம் அனைத்தையும் ஒரு மனித படைப்பில் காணலாம் என்ற சூத்திரத்தைத் தெளிவாக குருஜி அவர்கள் போதித்து விட்டார்கள். இதை ஆதாரக் கருத்தாகக் கொண்டு ஆன்மீகத்தையும், இறை உணர்வையும் மக்களிடையே நிரந்தரமாக நிலவச் செய்ய குருஜி அவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு கருவிதான் ஜோதிடக் கலை.
முன்னோர்கள் வகுத்த ஜோதிட கணண நெறி பிறழாது இயற்கையோடு இயைந்த விஞ்ஞான கோட்பாடுகளையும் புறக்கணிக்காமல் அற்புதமான படைப்புகளை உபன்யாச உபதேசம் மூலமாகவும், சக்தி வாய்ந்த எழுத்துக்கள் மூலமாகவும் இவ்வுலகிற்கு ஜோதிட அற்புதங்களை குருஜி அவர்கள் படைத்தருளியுள்ளார்கள். கார்த்திகா வித்யாபவன் அறக்கட்டளை, கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம், கார்த்திகா ஜோதிட ஆலோசனைப் பிரிவு, கார்த்திகா அதிர்ஷ்ட நவரத்ன ராஸிக் கற்கள் பிரிவு, கார்த்திகா தெய்வீக சேவைப் பிரிவு, கார்த்திகா ஜோதிடப் பேரவை என்ற அமைப்புகளையும் உலகத்தோடு ஒட்ட ஒழுகும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு குருஜி அவர்களின் இறை தூண்டுதலின் சிந்தனைக்கேற்ப ஸ்தாபிதம் செய்துள்ளார்கள்.
நித்ய பூஜை, விரத உபாசனைகள், அருள்மொழி ஆற்றுதல், தூய நிர்வாகம் இவைகளைக் கொண்ட குருஜி அவர்களின் அருளாசியுடன் கூடிய மஹா உன்னத இந்த குரு பீடம் விரைந்த சேவைகளுக்கென நிர்வாக அலுவலகத்தையும் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. தொலைதொடர்பு ஊடகங்கள் மூலம் கண்துஞ்சாமல் உலக மக்களின் சேவைக்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்ட குருஜி அவர்களின் ஆசி கலந்த அன்புக் குரலை இரவு பகல் இன்றி எந்த நேரத்திலும் செவிமடுக்கலாம். குருஜி அவர்களின் தலைமையின் கீழ் உள்ள நிர்வாக அலுவலகம், இயக்குநர், நிர்வாகி ஆகிய அலுவலர்களால் திறம்பட இயக்கப்பட்டு வருகிறது. இந்த குரு பீடம் பொருட் செலவு, சிரமங்களுக்கு இடையிலுள்ள கடுமையான உழைப்பு என்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. மக்கட் சேவை, இறைத் தொண்டு இவற்றை மட்டுமே குறிக்கோளாய் இருத்தி செயல்பட்டு வரும் குரு பீடத்தின் நிர்வாக அலுவலகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டதாகும் என குருஜி அவர்கள் அடிக்கடி வாய்மொழி அருள்வார்கள்.
ஜோதிடத் துறை மற்றும் ஆன்மீகம் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் நிர்வாக அலுவலகத்தை தொலைபேசி, FAX, MOBILE PHONE, மின் அஞ்சல், இணையதளம் ஆகிய தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். இதன் நிர்வாக அலுவலகம் கீழ்க்கண்ட முகவரியில் இயங்கி வருகிறது.