அறிமுகம்

  தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் 2005 – ஆம் ஆண்டு ஜோதிடப் பயிற்சி நிறைவு பெற்று, ஜோதிட மாமணி, ஜோதிட ரத்னா, ஜோதிடச் சுடர், ஜோதிட சிகரம், ஜோதிட பூஷணம் போன்ற பட்டங்கள் பெற்ற திரு. A. ராஜசேகரன் அவர்கள் தன்னடக்கம், விஷய ஞானம், தெய்வ பக்தி, குரு மரியாதை, பெரியோர்களை வணங்குதல் போன்ற நல்லொழுக்கங்கள் நிறைந்த குணசீலர். இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ளவர். தான் பெற்ற ஜோதிட ஞானத்தை தேவைப்படுவோருக்கு ஜோதிட அறிவுரையாக வழங்கி சேவை செய்யும் உன்னத குணத்தைக் கொண்டவர். நமது குருநார் அவர்களின் ஆசி பெற்ற இவர் எழுதிய கட்டுரையை “உங்கள் பக்கம்” என்ற நமது இணைய வலைதளத்தில் பிரசுரிப்பதை பெருமையாக நினைக்கிறோம். அவருடைய ஜோதிட சேவையும் இறைப் பணியும் சிறப்படைய தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் வாழ்த்துகிறது.

நமது குருநாதர் அவர்களின் நல்லாசியுடன்
நிர்வாகி

மனையும் மனிதர்களும்

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர :
குரு ஸாக்ஷாத் பரப்ரஹ்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம :

தெய்வ ஆசியோடும், குரு ஆசியோடும், பெரியவர்களின் ஆசியோடும் “மனையும் மனிதர்களும்” என்ற தலைப்பை வைத்து மக்கள் நல்ல முறையில் வாழ மக்களுக்கு பயன்படும் வகையில் என்னுடைய ஜோதிட ஆசான் எனக்குக் கற்றுக் கொடுத்ததையும், முப்பது வருட கட்டடக் கலை அனுபவத்தை வைத்தும் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
    அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதிலும் குருடு, செவிடு, ஊனமாய் இன்றி பிறப்பது அரிது. மனையும், மனைவியும், மக்களும், செல்வமும் இறைவன் கொடுத்த வரம். இதை பாதுகாப்பாக வைத்திருப்பது வாஸ்து.
    வாஸ்து சரியாக இருந்தால் இன்பமாக இருக்கலாம். ஒரு மனையை இரண்டு வாஸ்து பிரிவாக பிரிக்கலாம். 1. சூர்ய வாஸ்து, 2. சந்திர வாஸ்து. இவை இரண்டையும் அஷ்ட திக்கு பாலகர்கள் ஆட்சி செய்கிறார்கள்.
அஷ்ட திக்கு பாலகர்கள்
    ஓம் ஈசானியம் போற்றி. ஓம் இந்திரன் போற்றி. ஓம் அக்னி போற்றி. ஓம் எமன் போற்றி. ஓம் நிருதியே போற்றி. ஓம் வருணனே போற்றி. ஓம் வாயுவே போற்றி. ஓம் குபேரனே போற்றி போற்றி போற்றி…
திக் நற்பலன்கள
ஈசானியம்
    ஈசானிய திசை பூமிக்கடியில் நீர்நிலைத் தொட்டி அல்லது கிணறு இருந்தால் மக்களுக்கும், வீட்டுத் தலைவனுக்கும் நல்ல அறிவும், சிந்தனையும், செல்வமும், செயல்பாடு திறனும் அமையும்.
இந்திரன்
    இந்திரனிடத்தில் கிணறு இருக்கலாம். உணவு உட்கொள்ளும் இடம் இருக்கலாம். பூஜை செய்யும் இடம், படிக்கும் இடம் இருக்கலாம்.
அக்னி
    சமையல் செய்யும் இடம். ஆயுதம் வைக்கும் இடம். பிராணி வளர்க்கும் இடம். கணினிகள், மருந்துப் பொருட்கள் இருக்கலாம். வேலை செய்யும் பொருட்கள் வைக்கலாம்.
எமன்
    பூஜை அறை, படுக்கை அறை, தானிய அறை, சிறியவர்கள் படுக்கை அறை இருக்கலாம்.
நிருதி
    பெரியவர்கள் படுக்கும் அறை, பணப் பெட்டகம், பத்திரங்கள், பூஜை அறைகள் இருக்கலாம். ஈசானியப் பார்வையும் இருத்தல் வேண்டும்.
வருணன்
    படுக்கை அறை, பூஜை அறை, சிறியவர்கள் படுக்கும் அறை, சிறியவர்கள் படிக்கும் அறை, உறவினர்கள் தங்கும் அறை, தானியங்கள் வைக்கும் அறை, மருந்து வைக்கும் அறை இருக்கலாம்.
வாயு
    குளியல் அறை, சமையல் அறை, பிராணிகள், மாடிப் படிகள், பூமிக்கடியில் நீர் நிலைகள் இருக்கலாம்.
குபேரன்
    மேல் மட்ட தொட்டி இருப்பது நன்று. வீட்டின் தலைவாசல் இருப்பது நன்று. வரவேற்பு அறை இருப்பது நன்று.
திக் அசுப பலன்கள்
ஈசானியம்
    பூமிக்கு மேல் தண்ணீர் தொட்டி, சமையல் அறை, உயரமான மரம் இருக்கக் கூடாது.
இந்திரன்
    இரும்பு, பழைய பொருட்கள், பிராணிகள் இருக்கக் கூடாது.
அக்னி
    படுக்கை அறை, நீர்நிலைத் தொட்டி, பூஜை அறை, படிக்கும் அறை இருக்க்க் கூடாது.
எமன்
    பணப் பெட்டகம், மருந்துப் பெட்டி, படிக்கும் இடம் இருக்கக் கூடாது.
நிருதி
    கழிப்பறை, பூமிக்கு அடியில் நீர்நிலைத் தொட்டி இருக்க்க் கூடாது. சமையல் அறை இருக்க்க் கூடாது. மருந்து பொருட்கள் இருக்கக் கூடாது.
வருணன்
    இரும்பு, சமையல் அறை, பணப் பெட்டகம், மருந்துப் பொருட்கள், கணிணி சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கக் கூடாது.
வாயு
    பூஜை அறை, மருந்துப் பொருட்கள், பணப் பெட்டகம், பத்திரங்கள், எழுதும் பொருட்கள், தொழில் செய்யும் பொருட்கள் இருக்கக் கூடாது.
குபேரன்
    கழிப்பறை, கழிப்பறை குழி ஆகியவை இருக்கக் கூடாது. சிறியவர்களின் படுக்கை அறை இருக்கக் கூடாது. மருந்துப் பொருட்கள் இருக்கக் கூடாது.
மரங்கள்
ஈசானியம்
    மல்லிகைப் பூ, துளசி, மருதாணிச் செடி ஆகியவை இருக்கலாம்.
அக்னி
    செவ்வரளி, ரோஜாப் பூ, செம்பருத்தி செடிகள் ஆகியவை இருக்கலாம்.
நிருதி
    காய் காய்க்கும் மரங்களாகிய கொய்யா மரம், வாழை மரம், தென்னை மரம், முருங்கை மரம், வேப்ப மரம், மாமரம் ஆகியவை இருக்கலாம்.
வாயு
    வாழை மரம், சில பூச் செடிகள் இருக்கலாம்.
குத்தல்
    வீதி குத்தல் (தெரு), மனை குத்தல், மரம் குத்தல், கிணறு குத்தல், கோவில் குத்தல் ஆகியவை இருக்கக் கூடாது.
நிலவு
    ஒற்றைப் படையாக இருப்பது நன்று,
ஜன்னல்
    இரட்டைப் படையாக இருப்பது நன்று.
பிரதான வாசல் நிலை
அமைக்கப்பட வேண்டிய இடங்கள்
    ஈசானியத்திலிருந்து அக்னி வரை ஒன்பது பாகம் செய்து, இரண்டாம் பாகத்திலும், மூன்றாம் பாகத்திலும், நான்காம் பாகத்திலும் வைக்கலாம்.
    அக்னி முதல் நிருதி வரை ஒன்பது பாகம் செய்து, நான்காம் பாகத்தில் வைக்கலாம்.
    நிருதி முதல் வாயு வரை ஒன்பது பாகம் செய்து, நான்கு, ஐந்தில் வைக்கலாம்.
    வாயு முதல் ஈசானியம் வரை ஒன்பது பாகம் செய்து, நான்கு, ஐந்து, ஆறில் வைக்கலாம்.
அளவுகோல் முறை
    அளவுகோல் முறை மூன்று வகை உண்டு.
    1. சிதம்பர பதக்கோல்.
    2. தஞ்சை பதக்கோல்.
    3. மதுரை பதக்கோல்.
    இம்மூன்றில் வீடுகளுக்கு அதிகம் பயன்படுத்தும் அளவுகோல் சிதம்பர பதக்கோல் ஆகும்.
    கோவில்களுக்கு பயன்படுத்தும் அளவுகோல் தஞ்சை பதக்கோல் மற்றும் மதுரை பதக்கோல் ஆகும்.
    இதில் சிதம்பர பதக்கோலில் “மனை கட்டி மக்களுடன் சீரும் சிறப்புமாய் வாழலாம்”  தெய்வ ஆசியுடனும், குரு ஆசியுடனும் தங்களை வாழ்த்துகிறேன்.

இங்ஙனம்
A. ராஜசேகரன்
AT.P. 2153 / 2005
Cell : 99420 45492

Scroll to Top