தமிழ்ப் புத்தாண்டு விழா

இறைவனுள் அன்புடையீர்,

நலமே விளைக.

தங்கள் அனைவருக்கும் நமது குருநாதர் அவர்களின் ஆசியுடன் கூடிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மங்களகரமான பராபவ வருஷம் சித்திரை மாதம் 1 – ஆம் தேதி (14-4-2026) செவ்வாய்க்கிழமையன்று தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் நமது குருநாதர் அவர்களின் அறிவுரைப்படி நடக்கவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகளை கீழே விளக்கியுள்ளோம்.

தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி :

14-4-2026 அன்று காலை 6-00 மணிக்கு தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் விசேஷ பூஜையைத் தொடர்ந்து காலை 8-00 மணிக்கு நமது குருநாதர் அவர்கள், கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய மாணவ மணிகள் அனைவருக்கும் தாம்பூலம் அளித்து வித்யா போதனையுடன் ஆசி வழங்க உள்ளார்கள்.

அன்று காலை 9-00 மணிக்கு நமது பாரம்பரிய நிகழ்ச்சியாகிய பஞ்சாங்கம் படித்தல் நடைபெறும். பின்னர் ஜோதிட ரீதியாக நாட்டில் நிலவும் இயற்கைச் சீற்றம், பொருளாதார நிலை, பொருட்களின் விலை ஏற்ற இறக்கம், பங்குச் சந்தை, தங்கம் விலை, விவசாயம், கல்வி, ஆன்மிகம் போன்றவற்றின் மீதான ஜோதிட பலன்களை நமது குருநாதர் அவர்கள் அன்று தெரிவிக்க இருக்கிறார்கள். மேலும் பல புதிய ஜோதிட நுணுக்கங்களையும் அன்றைய தினம் நமது குருநாதர் அவர்கள் அறிவிக்க இருக்கிறார்கள். ஜோதிட சேவை செய்து வரும் தங்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் :

கார்த்திகா ஜோதிடப் பேரவையை திறம்பட இயக்குவதற்கு
கார்த்திகா ஜோதிடப் பேரவையின் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் நமது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய மாணவ மணிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சனிப் பெயர்ச்சி பூஜைகள் :

விசுவாவசு வருஷம் மாசி மாதம் 22-ஆம் தேதி (6-3-2026) வெள்ளிக்கிழமை காலை 8-26 மணியளவில் வாக்கியப் பஞ்சாங்க ரீதியாக சனி பகவான் மீன ராஸிக்குப் பெயர்ச்சியாவதை முன்னிட்டு அன்று விசேஷ பூஜைகள் நமது நிலையத்தில் நடைபெற இருக்கின்றன.

வேண்டுகோள் :

தமிழ்ப் புத்தாண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் இந்த அறிவிப்பை அறிந்து கொண்ட மூன்று தினங்களுக்குள் தங்களின் வருகையை நமது நிலையத்திற்குத் தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தெய்வ சக்தியால் உருவேற்றப்பட்ட அருட்பிரசாதங்கள் வேண்டுவோர் தங்கள் தேவைகளை முன்னரே நமது நிலையத்திற்கு தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

நமது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்த முக்கிய நிகழ்ச்சிகளில் தாங்கள் கலந்து கொண்டு குருவருளையும், திருவருளையும் பெற்றுச் செல்லுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நிர்வாகி
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in

Scroll to Top