சனிப் பெயர்ச்சி பூஜைகள்

நலமே விளைக.

ஸ்வஸ்திஸ்ரீ விசுவாவசு வருஷம் மாசி மாதம் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்கியப் பஞ்சாங்க ரீதியாக சனி பகவான் காலை 8-26 மணி அளவில் மீன ராஸிக்குப் பெயர்ச்சியாவதை முன்னிட்டு 6-3-2026 அன்று காலை 5-00 மணிக்குத் தொடங்கி தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், கலச ஆவாஹனம், புண்யாஹவாஜனம் ஆகிய புனஸ்காரங்களுடன் பூஜைகள் தொடங்கின.

சகல விக்னங்களையும் போக்கும் மஹா கணபதி பூஜையும், சகல கிரஹ தோஷங்களை நீக்கும் நவகிரஹ பூஜையும், நீண்ட ஆயுளை வழங்கும் ஆயுஷ்ய பூஜையும், கல்வியையும் ஞானத்தையும் வழங்கும் சுப்ரமண்ய காயத்ரியால் பூஜையும், இறையருளையும், உத்யோக மேன்மையையும் வேண்டி நிற்கும் புருஷ ஸுக்த பூஜையும், ஸ்ரீஸுக்த பூஜையும், தடைபட்டு வரும் திருமணத்தை தடங்கலின்றி நடத்திக் கொடுக்கும் சுயம்வரா பார்வதி பூஜையும், புத்ர சந்தான பாக்யத்தை விரும்பியவாறு அருளும் சந்தான கோபால கிருஷ்ண பூஜையும், துர்மரணம் என்னும் அப ம்ருத்யுக்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய பூஜையும், பில்லி, சூன்ய ஏவல்கள், தீய சக்தி இவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கும் மஹா சுதர்ஸன பூஜையும், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் ஸ்ரீ துர்கா பூஜையும், பொருட் செல்வத்தை சேர்க்கவும், சேர்த்த செல்வத்தை விரயமாகாமல் பாதுகாக்கவும் செய்யப்பட்ட குபேர பூஜையும், கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கவும், உரிமைகள் பறி போகாமல் இருக்கவும் வகை செய்கின்ற கார்த்த வீர்யாய பூஜையும், உலக மக்கள் க்ஷேமமாக இருக்கவும், உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட மத்ய ஐக்ய பூஜையும், உலக மக்கள் நோய்களிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுபட்டு சுகமான வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும், நாட்டை ஆளும் தலைவர்கள் நற்சிந்தனையுடனும், மதிநுட்பத்துடனும் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் இறைவனை பிரார்த்தித்து நடத்தப்பட்ட இந்திர அபயங்கர பூஜையும் சிறப்புற செய்யப்பட்டன.

இந்த பூஜைகளில் மூல மந்திரங்களாலும், ஜபங்களாலும் உருவேற்றப்பட்ட திருஷ்டி சக்கரங்கள், வாஸ்து சக்கரங்கள், குபேர தனாஹர்ஷண சக்கரங்கள், சுதர்ஸன சக்கரங்கள், ஸ்ரீ சக்கரங்கள், மஹாலக்ஷ்மி சக்கரங்கள், விநாயகர் கவசங்கள், ஆஞ்ஜநேயர் கவசங்கள், சுப்ரமண்யர் கவசங்கள், பலவகை ருத்ராட்சங்கள், ரஸமணிகள், ராஜ வஸிய மூலிகைக் குங்குமம், அதிர்ஷ்ட ராஸிக் கற்கள், ஸ்வர்ண ஸ்படிக மாலைகள், முத்து மாலைகள், நவரத்ன மாலைகள் ஆகியவை படைக்கப்பட்டு உருவேற்றி தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டன.

இறையருள் சூழ்ந்து நிற்கும் இந்த பூஜைகளின் பொழுது அர்ச்சனைகளும் பரிகாரங்களும் செய்யப்பட்டன. இந்த சனிப் பெயர்ச்சி பூஜைகளில் நேரடியாகவும் மானசீகமாகவும் கலந்து கொண்டவர்களின் சிரமங்கள் அனைத்தும் குறையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

சிறப்புமிக்க இந்த பூஜைகள் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் குருஜி அவர்களின் தலைமையில் நெருஞ்சிப்பேட்டை ஸ்ரீ ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரம் கனபாடிகள் வழி நடத்த, ஸ்ரீ ராஜா சாஸ்திரிகள் மற்றும் ஸ்ரீ ஹரிஹரன் சாஸ்திரிகள் ஆகியோர் பூஜைகளை சிறப்பாக நிறைவு செய்தார்கள். மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் ஆகியவற்றுடன் சனிப் பெயர்ச்சி பூஜைகள் நிறைவடைந்தன.

பூஜை ஏற்பாடுகளை கார்த்திகா ஜோதிடப் பேரவை செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும், கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் மாணவர்களும், கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் மீது பற்று கொண்டுள்ள ஆன்மிக அன்பர்களும் பங்கேற்று பூஜை நிகழ்ச்சிகளை முழுமை செய்தனர்.

கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளர்கள் பூஜை ஏற்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது பாராட்டும் வகையில் இருந்தது.

நிர்வாகி
(கார்த்திகா பூஜா அமைப்புப் குழு),
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
போன் : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : Karthikasiddarth@yahoo.co.in

 

Scroll to Top