நலமே விளைக.
விசுவாவசு வருடம்
விசுவா வசுவருடம் வெள்ளாண்மை யேறும்
பசுமாடும் மாடு பலிக்கும் – சிசுநாசம்
மற்றையரோ வாழ்வார்கண் மாதவங்கள் மீறுமே
உற்றுலகி னல்லமழை யுண்டு.
— இடைக்காடர் சித்தர்
பொருள்
விசுவாவசு வருடத்தில் பயிர்த் தொழில் உயர்வு காணும். பசு, மாடு, ஆடு ஆகிய கால்நடைகள் விருத்தியாகும். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளும், பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் தீங்கு ஏற்படும் வருடம் இது. வாழும் நான்கு வர்ண மனிதர்களில் சூத்திரர் என்ற பிரிவினர் சிறப்பாக வாழ்வர். அந்தணர், ~த்திரியர் மற்றும் வணிகர் வளர்ச்சியில் தேக்கத்தையும், சிரமங்களையும் காண்பர். மக்களிடையே ஆன்மிகம், தெய்வ பக்தி ஆகிய நன்றாக இருந்தாலும் சமய விதிமீறல்கள், அதனால் போராட்டங்கள் அதிகமாக இருக்கும். மேலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மாறி மாறி மழை பொழியும்.
அருளுரை
தமிழ் வருடப் பிறப்பாகிய இந்த நாள் முதல் இவ்வாண்டு முழுவதும் தாங்கள் தங்கள் குடும்பத்தாருடன் நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும், பயனுள்ள கல்வியையும், அறிவாற்றலையும், எதிரிகளை வெல்லும் திறமையையும், ஆதாயமான நிலபுலன்களைப் பெற்றும், உற்றாருடன் அன்புடன் கூடிய உறவையும், முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும், நிரந்தர தொழில் மற்றும் மன நிறைவான உத்யோகத்தையும், செய்தொழிலில் நிறைவான லாபத்தையும், தொழில் நஷ்டம் மற்றும் வீண் செலவுகளிலிருந்து பாதுகாப்பையும் பெற்று இறையருளால் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்.
நல்லாசிகளுடன்,
அன்புள்ள,
குருநாதர்.
