


கார்த்திகா ஜோதிட சேவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
கண்ணுக்குத் தெரிந்த வளி மண்டலம், நக்ஷத்திரங்கள், கிரஹங்கள் என எல்லையில்லா வான வெளியில் உள்ள அதிசயங்களை ஓரளவிற்குத்தான் மனிதன் அறிந்துள்ளான். இயற்கையினுள் பொதிந்து கிடக்கும் ரகஸியங்களை அறிந்து கொள்ள மனிதன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் ஏராளம். ஓரிரு நாட்களில் மழை வரும் எனத் தெரிவிக்கக் கற்றுக் கொண்ட மனிதன் அடுத்த வருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கவிருக்கும் இயற்கை மாற்றத்தையும் கண்டுணர்த்தத் தெரிந்து கொண்டான். ஜோதிடக் கலை தோன்றுவதற்கு இதுதான் அடிப்படைக் கருத்தாக அமைந்துள்ளது.

ஆண்டுகள் பல உருண்டன. முன்னோர்களின் கண்டுபிடிப்புகளும் பல புதிய வடிவில் உருப்பெற்றன. இதேபோன்று ஜோதிட சாஸ்திரத்தை ஆராய்ந்த இந்த நிறுவனம் முன்னோர்களின் ஜோதிட நெறிமுறைகளை ஆதாரமாகக் கொண்டு இந்த யுகத்திற்குத் தக்கவாறு ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு அதன் வெளிப்பாடுகளை பலவடிவில் மக்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. கார்த்திகா என்ற நிறுவனப் பெயரை முன் இணைத்து ஜோதிடப் பயிற்சி, ஜோதிட ஆலோசனை, ஆன்மீக சேவை, நவரத்ன ராஸிக் கற்கள் பரிந்துரை, ஜோதிடப் பேரவை என பல அங்கங்களை ஒன்றிணைத்து பல்வேறு கோணங்களில் ஜோதிடக் கலையை ஆராய்ந்து அதன் விளைவாகத் தோன்றிய புதிய கண்டுபிடிப்புகளை தெளிவுரையாகவும், ஆலோசனையாகவும், அறிவுரையாகவும் இந்த நிறுவனம் மக்களுக்கு தெளிவாக அறிவித்து வருகிறது.
– நிர்வாகி