குரு பெயர்ச்சி பூஜை மற்றும் ஹோம விழா – 2017

ஸ்வஸ்திஸ்ரீ ஜய வருஷம் வைகாசி மாதம் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சனி பகவான் மிதுன ராஸியிலிருந்து கடக ராஸிக்கு பெயர்ச்சியானதையொட்டி, சனிக்கிழமை (14-6-2014) அன்று காலை 5-00 மணி தொடங்கி கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,  கார்த்திகா வித்யாபவன் அறக்கட்டளை மற்றும் கார்த்திகா ஜோதிடப் பேரவை சார்பில் குரு பெயர்ச்சி பூஜைகளும், ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்றன. விக்னேஸ்வர பூஜை , சங்கல்பம், கலச ஸ்தாபிதம், ஆவாஹனம், ஜபம் போன்ற புனஸ்காரங்களும் அதன் பின்னர் ஹோமங்களும் செய்யப்பட்டன.

பூஜைகள்

இந்த பூஜையில் அர்ச்சனைகளும், பரிகாரம் செய்து கொள்பவர்களுக்கு சங்கல்பமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. குரு பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. சகல விக்னங்களையும் நீக்கும் மஹா கணபதி ஹோமம் தொடங்கி, கிரஹ தோஷங்களை நீக்கும் நவகிரஹ ஹோமமும், நீண்ட ஆயுளை வழங்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமமும், ஆயுஷ்ய ஹோமமும், புத்ர சந்தான பாக்யத்தை வழங்கும் சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும், சகல சம்பத்துக்களையும் வழங்கும் புருஷ ஸுக்தம் மற்றும் ஸ்ரீ ஸுக்த ஹோமமும், பில்லி சூன்ய ஏவல்களிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பு வழங்கும் ஸ்ரீ துர்கா ஹோமமும், கல்வியையும், ஞானத்தையும் வழங்கும் சுப்ரமண்ய காயத்ரி ஹோமமும், தடைபட்டு வரும் திருமணத்தை தடங்கலின்றி நடத்திக் கொடுக்கும் சுயம்வரா பார்வதி ஹோமமும், செல்வத்தை அள்ளித் தரும் குபேர ஹோமமும், சகல நோய்களையும் குணமாக்கும் தன்வந்த்ரி ஹோமமும், இந்த உலகத்திலும், இந்திய நாட்டிலும் எந்த பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லாமல் மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், வறுமை அகல வேண்டும் என்றும், உலக உயிர்கள் அனைத்தும் நோய்களிலிருந்து விடுபட்டு சுகமான வாழ்வு வாழ வேண்டும் என்றும் நாட்டை ஆளும் தலைவர்களுக்கு நல்ல எண்ணத்தையும், மதிநுட்பத்தையும் வழங்க வேண்டும் என்றும் பிரார்த்தித்து இந்திர அபயங்கர ஹோமமும் செய்யப்பட்டது. பின்னர் பூர்ணாஹுதியும்,  வசோத்தாரை ஹோமமும், சிறப்பாக நடந்தேறியது. புனர்பூஜையுடன் பூர்வாங்க, பிரதான, உத்தராங்க பூஜைகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

பூஜை புனஸ்காரங்கள் பற்றியும், குரு பெயர்ச்சியினால் ஏற்படும் ஜோதிட பலன்கள் குறித்தும் கார்த்திகா குரு பீடத்தின் குருஜி அவர்கள் தெளிவாக அறிவித்து திருஉரை ஆற்றினார்கள்.

பங்கேற்ற வேத சாஸ்திரிகள்

நெருஞ்சிப்பேட்டை ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் கனபாடிகள், நெருஞ்சிப்பேட்டை ஸ்ரீ ராஜா சாஸ்திரிகள், ஈரோடு ஸ்ரீ ஹரிஹரன் சாஸ்திரிகள் ஆகியோர் வழி நடத்த மற்றும் பல வேத சாஸ்திரிகள் வேத மந்திரங்களால் பூஜைகளையும், ஹோமங்களையும் தெய்வத் திருவருளால் மிக சிறப்பாக நிறைவேற்றினார்கள்.

பூஜை விழா நிறைவில் அன்னதானம் நடைபெற்றது. வந்திருந்த அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தால் நடத்தப்பட்ட இந்த குரு பெயர்ச்சி ஹோம பூஜையில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய மாணவர்களும், ஆன்மீக அன்பர்களும் ஆயிரக்கணக்காக திரண்டு வந்திருந்து இந்த பூஜைகளில் கலந்து கொண்டு மனநிறைவோடு தெய்வ அருளைப் பெற்றுச் சென்றனர்.
பூஜை புனஸ்காரங்கள் பற்றியும், குரு பெயர்ச்சியினால் ஏற்படும் ஜோதிட பலன்கள் குறித்தும் கார்த்திகா குரு பீடத்தின் குருஜி அவர்கள் தெளிவாக அறிவித்து திருஉரை ஆற்றினார்கள்.

திறமையான செயலாற்றல்

இந்த குரு பெயர்ச்சி பூஜை மற்றும் ஹோம விழாவினை கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய நிர்வாகத்தினர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கார்த்திகா ஜோதிடப் பேரவையின் செயலாளர் அரக்கோணம் ‘ஜோதிட ரத்னா’ திரு. ஆர். விநாயகம், பொருளாளர் தாராபுரம் ‘ஜோதிட ரத்னா’ திரு. தி. தங்கவேல் மற்றுமுள்ள செயற்குழு உறுப்பினர்களும், ஜோதிட மாணவர்களும் குரு பெயர்ச்சி பூஜை மற்றும் ஹோம விழா சிறப்பாக நடைபெறும் வகையில் திறம்பட செயலாற்றினார்கள்.
ஆன்மீக பெருமக்கள் அனைவருக்கும் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் குருநாதர் அவர்கள் நல்லாசி வழங்கினார்கள்.

நிர்வாகி செயலாற்றல்

கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
தாராபுரம்.

Scroll to Top